நைட்டி விவகாரத்தில் என்னை டி.ஆர்.பிக்காக பயன்படுத்திவிட்டார்கள் : பிரிய வர்ஷினி பரபரப்பு பேச்சு!
பிக் பாஸ் தி காமன்மேன் நிகழ்ச்சி கடந்த 16ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகி வருகிறது. பொது மக்களையும் போட்டியாளர்களாக தேர்வு செய்வதாக கூறப்பட்ட இந்த நிகழ்ச்சி, தொடங்கிய முதல் நாளிலேயே பல்வேறு விமர்சனங்களை சந்தித்து வருகிறது.
பிக் பாஸ் தி காமன்மேன்
முதலில், 50 போட்டியாளர்களை இரண்டு பேருந்துகளில் அழைத்துச் சென்று, விசில் அடித்ததும் போட்டி போட்டு பேருந்தில் ஏற வைத்த சம்பவம் சமூக வலைதளங்களில் விமர்சனத்தை ஏற்படுத்தியது.

சாதாரண மக்களை இவ்வாறு நடத்துவது ஏன் என பலரும் கேள்வி எழுப்பினர். இதற்கிடையே, போட்டியாளர் பிரிய வர்ஷினி நைட்டி அணிந்து வந்ததும் சர்ச்சையானது.
இது ஷூட்டிங் என்பதால் வேறு உடையில் வருமாறு நடுவர்கள் கூறிய நிலையில், தான் நைட்டியில் வருவது குறித்து ஏற்கனவே அனுமதி கேட்டதாகவும், அதற்கு சம்மதம் தெரிவித்திருந்ததாகவும் பிரிய வர்ஷினி கூறினார்.
“நைட்டி அணிவது கொலைக் குற்றமா? நான் என்ன பிறந்தமேனியாகவா வந்தேன்?” எனக் கேள்வி எழுப்பிய அவர், தன்னை தேர்வு செய்யவில்லை என்றால் பரவாயில்லை என்றும் தெரிவித்தார்.இதையடுத்து அவர் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

பிரிய வர்ஷினி பேச்சு வைரல்
இதுகுறித்து பேசிய பிரிய வர்ஷினி, “காமன்மேன் என பெயர் வைத்துவிட்டு உண்மையான காமன்மேன்களை தேர்வு செய்வதில்லை.
நைட்டியில் வருவதற்கு முன்பே அனுமதி கேட்டிருந்தேன். நைட்டி கூடாது என முன்பே கூறியிருந்தால் வேறு உடையில் வந்திருப்பேன். என்னை டி.ஆர்.பிக்காக பயன்படுத்திக் கொண்டது போல் இருக்கிறது” என குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும், நிகழ்ச்சியில் ஆரி, மாயா உள்ளிட்டோர் பேசிய விதம் தனக்கு பிடிக்கவில்லை என்றும், அந்த காட்சிகளை முழுமையாக ஒளிபரப்புமாறு விஜய் டிவி மற்றும் ஹாட்ஸ்டாருக்கு சவால் விடுவதாகவும் அவர் கூறினார்.
பிரிய வர்ஷினியின் பேச்சுக்கு ஆதரவாகவும் எதிராகவும் சமூக வலைதளங்களில் விவாதம் நடைபெற்று வரும் நிலையில், அவரை பிக் பாஸ் வீட்டிற்கு அனுப்பியிருந்தால் நல்ல கன்டென்ட் கிடைத்திருக்கும் என சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இதற்கிடையே, பிக் பாஸ் அல்டிமேட் டைட்டில் வென்ற பாலாஜி முருகதாஸ், “ஆடிஷனுக்காக கண்ணியத்தை விடுவதா? சுயமரியாதை முக்கியம்” என தனது எக்ஸ் பதிவில் கருத்து தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த விவகாரம் தற்போது இணையத்தில் சூடுபிடிக்க ஆரம்பித்திருக்கின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |