மத்திய அரசின் சட்டவிதியை ஏற்காத வாட்ஸ் அப்.. நீதிமன்றத்தில் கொடுத்த வழக்கு!
சமூக வலைதளங்களுக்கு புதிய சட்ட விதியை கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மத்திய அரசு இயற்றிய நிலையில் அந்த விதிமுறைகளை கடைபிடிக்க ஒப்புக்கொள்ளும் காலக்கெடு முடிந்தது.
இதனையடுத்து டுவிட்டர், பேஸ்புக் வாட்ஸ் அப் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் இன்று முதல் மூடப்படுமா? என்ற கேள்வி எழுந்தது இதனிடையே, மத்திய அரசு கொண்டு வந்து இருக்கும் புதிய ஐடி விதிகளை பின்பற்றும் முடிவில் இருப்பதாக ஃபேஸ்புக் தெரிவித்தது.
அதே சமயம் இது தொடர்பாக அரசுடன் சில விஷயங்கள் பற்றி ஆலோசனை செய்ய வேண்டும் என்றும் ஃபேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆனால், சற்று முன் வெளியான தகவலின் படி மத்திய அரசின் புதிய சட்ட விதிகளுக்கு எதிராக வாட்ஸ்அப் நிர்வாகம் டெல்லி உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்து உள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், புதிய விதிகள் தனியுரிமை தகவல் பாதுகாப்பு முற்றுப்புள்ளி வைக்கும் என்றும் இது அரசியல் சாசன சட்டத்திற்கு எதிரானது என்றும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வழக்கு நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.