WhatsApp-ல் வெளியான அடுத்த சூப்பரான அப்டேட் - இனி வீடியோ கெத்து காட்டலாம்…
உலகம் முழுவதும் 2 கோடிக்கும் அதிகமான மக்கள் வாட்ஸ் அப் செயலியை பயன்படுத்தி வருகிறார்கள்.whatsapp நிறுவனம் தன்னுடைய பயனர்களுக்கு அவ்வப்போது புது புது அப்டேட்டுகளை வெளியிட்டு வருகிறது.
அந்த வகையில் தற்போதும் புது அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது, வாட்ஸ் அப்பில் பயனர்கள் தாங்களே கார்ட்டூன் அவதாரை உருவாக்கி பயன்படுத்தலாம் என்றும், அதற்கென பிரத்யேக அம்சம் ஒன்றை வெளியிட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், வீடியோ கால் வசதியில் இதுவரை 8 பேர் மட்டுமே ஒரே நேரத்தில் பேச முடியும் என்ற நிலை இருந்தது.
ஆனால் தற்போது 32 வரை பாதுகாப்பான என்க்ரிப்ட் செய்யப்பட்ட வீடியோ பேசலாம் என வாட்ஸ் அப் நிறுவனம் தெரிவித்து புதிய அப்டேட்டை வெளியிட்டுள்ளது.
ஜூன் 2022 நிலவரப்படி 487.5 மில்லியன் பயனர்களுடன் வாட்ஸ்அப் செயல்பட்டு வருகிறது.