வாட்ஸ் அப் குரூப்பில் சூப்பரான அப்டேட் அறிவிப்பு - மகிழ்ச்சியில் பயனாளர்கள்
உலகில் வாட்ஸ் அப் செயலியை 2 கோடிக்கும் அதிகமான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். காலையில் எழுந்தவுடன் இருந்து இரவு தூங்கும் வரை வாட்ஸ் அப் செயலியை பயன்படுத்தாத நபர்களே இல்லை.
அந்த அளவிற்கு வாட்ஸ் அப் அரட்டை செயலி பிரபலமான ஒன்று. அடிக்கடி இந்நிறுவனம் ஏதாவது ஒரு அப்டேட்டை வழங்கி வரும்.
புதிய அப்டேட்
அந்த வகையில், தற்போது வெளியாகியுள்ள அப்டேட் அறிவிப்பில் ஒரே வாட்ஸ் அப் குரூப்பில் 512 உறுப்பினர்களை சேர்க்க முடியும் என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும் 2ஜிபி வரையிலான போட்டோ, வீடியோ போன்றவற்றையும் பகிரும் வசதியும் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.
இதற்கு முன்பு ஒரே நேரத்தில் வாட்ஸ்-அப் வாய்ஸ் காலில் 8 பேர் மட்டுமே இணைய முடியும் என்ற நிலையில் தற்போது இனி ஒரே நேரத்தில் 32 பேர் கலந்துரையாடலாம் என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த அறிவிப்பால் வாட்ஸ்அப் பயன்படுத்தும் பயனர்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
