ஆப்பிள் 14 மாடலில் வெளியாகப்போகும் புதிய அசத்தலான அம்சங்கள்
ஆப்பிள் ஐபோன் என்றால பலரும் வாங்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஐபோனில் ஆண்டுக்கு ஒரு மாடலை அறிமுகம் செய்வது வழக்கம்.
அந்த வகையில், தற்போது ஐபோன் 14 சிரீஸ் மாடல் பல மாறுபாட்டை பெற்றுள்ளது. இதில், ஒரு புதிய சாதனத்தைப்பற்றிய விவரங்களையும் வெளிப்படுத்தியுள்ளது.
அதன்படி, ஐபோன் 14 மேக்ஸ் மாடலானது 90Hz OLED டிஸ்ப்ளேவுடன் வர உள்ளதாக கூறியுள்ளனர். இதன் சிப்செட்டுடன் 6GB ரேம் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.
இந்த புதிய வசதியுடன் கூடிய ஸ்மார்ட்போனை வாங்க சுமார் $300 (ரூ. 21,000) டாலர் கூடுதலாக செலவழிக்க வேண்டி இருக்கும்.
ஐபோன் 14 சீரீஸின் முந்தைய மாடல்களை போலவே இந்த மாடலும் இருக்குமாம். ஆனால் மினி மாடலை தவிர்த்து மேக்ஸ் மாடலை வாங்கினால் பல வசதிகளும் அம்சங்களும் கிடைக்குமாம்.
புதிய அம்சங்கள்
இத்தோடு ஐபோன் 14 மேக்ஸ் மாடலில் டூயல் 12 மெகாபிக்சல் கேமராக்களை கொண்டிருக்கும் என்று தெரிவித்துள்ளனர். ஆப்பிள் ஐபோன் 14 மேக்ஸ் மாடலில் 128 ஜிபி மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ் ஆகிய இரு வேறு வசதிகளும் தரப்பட உள்ளன.
ஐபோன் 14 ப்ரோ சீரிஸில் 2 டிபி வரை உயர்த்தப்படலாம். இந்த ஐபோன் 14 சிரிஸை சுற்றி ஏற்கனவே நிறைய உரையாடல்கள் வந்து கொண்டுள்ளன.
இதுகுறித்த தகவலை அடுத்த மாதம் நடைபெறும் விர்ஷுவல் மீட்டிங்கில் பல தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆப்பிள் நிறுவனம் தனது ஸ்மார்ட்போனின் அடுத்த ios பற்றிய தகவலையும் இந்த வெளியீட்டில் தரவுள்ளது.
ஐபோன் பிரியர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி தங்களுக்கான சிறந்த மொபைல் பதிவு செய்ய தயாராக இருங்கள்.