லட்சக்கணக்கில் முடக்கப்பட்ட வாட்ஸ்அப் கணக்குகள்! உஷார் மக்களே
வாட்சப் நிறுவனத்தில் கொள்கைகளுக்கு எதிராக செயல்பட்டதாக கூறி, இந்தியாவில் மட்டும் இதுவரை 18லட்சத்துக்கும் மேலான வாட்சப் கணக்குகள் முடக்கபட்டுள்ளதாக அந்த நிர்வாகம் தெரிவித்துள்ளது.
உலகம் முழுவதும் உள்ள மக்கள், அதிகம் பயன்படுத்தும் செயலிகளில் ஒன்று வாட்ஸ்அப். இந்த செயலியின் மூலமாக, உலகின் எந்த மூலையில் உள்ள நபருக்கும் நம்மால் கருத்துக்களை அனுப்ப முடியும்.
அந்த வகையில் இந்தியாவை பொறுத்தவரை, கடந்த ஒரே மாதத்தில் சுமார் 18,58,000 க்கும் அதிகமான கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக மெட்டா நிர்வாகம் அறிவித்துள்ளது.
மத்திய அரசின் புதிய தகவல் தொழில்நுட்ப சட்ட விதிகளை மீறிய பயனர்களின் கணக்குகளும், கொள்கை வீதிமீறல்களில் ஈடுபட்ட பயனர்களின் வாட்ஸ்அப் கணக்குகளும் முடுக்கப்பட்டுள்ளதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
அதுபோல இந்த வாட்ஸ் அப் மூலம், குற்றச்சாட்டுகளை பதிவு செய்யும் முறைகளையும் அந்த நிர்வாகம் விளக்கியுள்ளது. இது போக, grievance_officer_wa@support.whatsapp.com என்ற மின்னஞ்சல் வாயிலாக புகார்களை பதிவு செய்யலாம் என்றும், குறை தீர்க்கும் அலுவலருக்கு கடிதம் வாயிலாகவும் உங்கள் குற்றச்சாட்டுகளை தெரிவிக்கலாம் என்றும் அறிவித்துள்ளது.
ஒருவேளை பயனர்களின் வாட்ஸ்அப் கணக்கை தடை செய்யப்பட்டிருந்தால், அதைப் பயன்படுத்தும் போது Your phone number is banned from using WhatsApp. Contact support for help என்ற தகவல் உங்கள் செல்பேசிக்கு தகவல் வரும் என்றும், தவறான செய்தியை பகிர்தல், தவறான நடத்தை செய்தல், சட்ட விரோத செயல்களை மேற்கொள்ளும் குழுவின் பகுதியாக செயல்படுதல் உள்ளிட்ட காரணங்களால் வாட்ஸ்அப் முடக்கப்படும் என்றும் வாட்சப் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.