Whatsapp அவதார்களை உருவாக்குவது, பயன்படுத்துவது எப்படி?
Meta நிறுவனம் virtual bitmoji-style பாணியிலான கஷ்டமய்ஸ் அல்லது நாங்கள் விரும்பி செய்யக்கூடிய வர்ச்சுவல் கேரக்டர்களை அல்லது அவதார்களை உருவாக்கும் வசதிகளை whatsappபில் அறிமுகம் செய்துள்ளது.
Meta நிறுவனத்தின் இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் போன்ற செயலிகளில் ஏற்கனவே காணப்படும் இந்த தொழில்நுட்பம் வாட்ஸ் அப்பிலும் அறிமுகம் செய்யப்படுகின்றது.
நீங்கள் உங்களுக்கே உரித்தான டிஜிட்டல் அவதார் ஒன்றை உருவாக்கி நண்பர்களுக்கும் குடும்பத்தினர்களுக்கும் அனுப்பி மகிழ முடியும்.
instagram மற்றும் பேஸ்புக் என்பனவற்றில் காணப்படும் அதே அம்சங்களை இந்த whatsapp அவதார் கொண்டுள்ளது.
பயனர் பல்வேறு விடயங்களை தெரிவு செய்யக்கூடிய ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளன.
உதாரணமாக ஸ்கின் கலர், தலைமுடி அமைப்பு, முடியின் அமைப்பு, முடியின் நிறம் ஆடை அலங்காரம் உள்ளிட்ட பல்வேறு விடயங்களை தெரிவு செய்யக்கூடிய சந்தர்ப்பம் உருவாக்கப்பட்டுள்ளது.
அவதார் உருவாக்கப்பட்ட உடன் whatsapp தானியங்கி அடிப்படையில் குவாட்டர்லியன் ஸ்டிக்கர்களை உருவாக்கி பல்வேறு வகைகளில் அவற்றை சேமித்துக் கொள்கின்றது.
உங்களது இந்த அவதார் உருவத்திற்கு பில்லியன் கணக்கான மாற்று வடிவமைப்புக்களை உருவாக்க முடியும் என whatsapp நிறுவனம் தெரிவிக்கின்றது.
தலை முடி முக அம்சங்கள் ஆடை அலங்காரம் என்பனவற்றை பல வழிகளில் மாற்றி அமைக்க முடியும் என தெரிவித்துள்ளது.
பல்வேறு எமோஷன்களை செயற்பாடுகளை பிரதிபலிக்கும் வகையில் இந்த அவதார்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
whatsapp அவத்தார்கள்: எங்கே இதை பயன்படுத்த முடியும்?
whatsapp தனது பயனர்களுக்கு அவதார்களை உருவாக்கவும் தானியங்கி அடிப்படையில் ஸ்டிக்கர்களை உருவாக்கி அவற்றை சேட்களின் போது பயன்படுத்தவும் வசதி அளிக்கின்றது.
பயனர்கள் தங்களது ப்ரோபைல் படமாகவும் இந்த அவதார்களை பயன்படுத்திக் கொள்ள முடியும்.
whatsapp அவதார்களை உருவாக்குதல்
தலைமுடி முகத்தின் நிறம் ஆடை அலங்காரம் போன்ற சில விடயங்களை தெரிவு செய்வதன் மூலம் இலகுவாக whatsapp ஊடாக அவதார்களை உருவாக்க முடியும்.
தற்பொழுது ஸ்டிக்கர்ஸ் பகுதிக்கு சென்று பார்த்தால் நியூ அவதார் பேனர் என ஒன்று மேல் பகுதியில் காணப்படும்.
அந்த பகுதியை தெரிவு செய்து அவதார் கிரியேட்டர் என்பதை ஓபன் செய்யவும் கெட் ஸ்டார்டர் என்பது அழுத்தவும்
தற்பொழுது ஸ்கின் கலர் ஹேர் ஸ்டைல் ஹேர் கலர் பேஸ் ஷேப் அவுட் பிட் கிளாசஸ் மேக்கப் ஹியரிங் என உங்களுக்கு தேவையான அம்சங்களை நீங்கள் தெரிவு செய்து கொள்ளலாம்.
இந்த அவதார் உங்களை போல பிரதிபலிப்பதை கூடுமானளவு உறுதி செய்வதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.
நீங்கள் இந்த அனைத்து விடயங்களையும் தெரிவு செய்து விட்டால் (Done)டன் என்பதை அழுத்தவும்.
அவதார் உருவாக்கத்தை செய்து விட்டால் whatsapp தானியங்கி அடிப்படையில் பல ஸ்டிக்கர்களை உருவாக்கிக் கொள்கிறது.
வாட்ஸ் அப்பில் அவதார்களை எவ்வாறு எடிட் செய்வது
வாட்ஸ் அப்பை திறக்கவும் ஏதாவது ஒரு சாட் விண்டோவை திறக்கவும்,
இமோஜி ஐகானை தெரிவு செய்யவும்
பின்னர் அவதார் ஐகானை டாப் செய்யவும் பின்னர் சக அடையாளத்தை டாப் செய்து அவதார் ஸ்டிக்கர் செலக்சன் என்பதை தெரிவு செய்யவும்
அதன் கீழே உங்களுக்கு எடிட் ஆப்ஷன் கிடைக்கப்பெறும் அதனை அழுத்தி உங்களுக்கு தேவையான மாற்றங்களை நீங்கள் செய்து கொள்ளலாம்
இறுதியில் டன் என்பதை அழுத்தவும்
whatsapp அவதார்களை எவ்வாறு டெலிட் செய்வது
அவதார் எடிட்டர் சென்று தேவையற்ற அவத்தார்களை டெலிட் செய்யவும்
பிரிவியூ என்னும் பகுதிக்கு சென்று தேவையானவற்றை அழித்துக் கொள்ள முடியும்.
அவதார்களை ப்ரோபையில் பிச்சராக எவ்வாறு மாற்றவது
செட்டிங்ஸிற்கு மேலதிகமாக காணப்படும் மூன்று புள்ளிகளை சொடுக்கவும்.
உங்களது ப்ரோபைல் ஐகானை தெரிவு செய்யவும் கமராக ஐகானை தெரிவு செய்க?
தேவையான அவதார் ஒப்ஷனை தெரிக
உங்களது ப்ரோபைல் பிச்சரை தெரிவு செய்க
உங்களுக்கு விருப்பமான அவதாரை தெரிவு செய்க,
உங்களுக்கு விருப்பமான பின்னணியை தெரிவு செய்க
ஒருமுறை தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் வலது பக்க மேல் மூலையில் காணப்படும் டிக் மார்க் இடவும்.