இந்த ராசியினரின் திருமண வாழ்க்கை சோகம் நிறைத்ததாம்... ஏன்னு தெரியுமா?
ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரம் ஒருவர் பிறக்கும் ராசியானது அவர்களின் எதிர்கால வாழ்க்கை, விசேட ஆளுமை, நிதி நிலை மற்றும் அவர்களின் நேர்மறை, எதிர்மறை குணங்களில் பெருமளவில் ஆதிக்கம் செலுத்தும் என குறிப்பிடப்படுகின்றது.
அந்த வகையில் குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்தவர்களின் திருமண வாழ்க்கை எவ்வளவு தான் மகிழ்சியாக ஆரம்பித்தாலும் பின்னர் பல்வேறு சோகம் நிறைந்ததாக மாறிவிடும்.
அப்படி திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியை ஒருபோதும் அனுபவிக்க முடியாமல் தவிக்கும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
மிதுனம்
மிதுன ராசியில் பிறந்தவர்கள் பொதுவாகவே இரட்டை இயல்புக்கு பெயர் பெற்றவர்களாக இருப்பார்கள். அதனால் தங்களின் தனிப்பட்ட விடயங்களில் ரகசியம் காப்பதை வழக்கமாக வைத்திருப்பார்கள்.
இவர்களின் இரட்டை ஆளுமை, ஒரு உறவில் சரியான முடிவெடுக்க இயலாத நிலையை உண்டாக்கிவிடும். இது திருமண உறவில் துணைக்கு தவறான புரிதல்கள் மற்றும் விரக்திகளுக்கு வழிவகுக்கும்.
மேலும் அவர்கள் வாழ்நாள் முழுவதும் ஒரே நபருடன் தங்க விரும்புவதில்லை. இவர்களி்ன் விருப்பங்களில் இவர்களுக்கே சளிப்பு நிலை ஏற்படுவதன் காரணமான இந்த ராசியினரின் திருமண வாழ்க்கை சற்று குழப்பமும், சோகமும் நிறைந்ததாக இருக்கும்.
கன்னி
கன்னி ராசியில் பிறந்தவர்கள் எல்லா விஷயத்திலும் முழுமையை விரும்புவார்கள். இவர்கள் அனைத்து விஷயங்களையும் திட்டமிட்டு சரியாக செய்ய வேண்டுமென்று எதிர்பார்ப்பவர்கள்.
அவர்களின் இந்த குணம் அவர்களுடைய திருமண வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். குறிப்பாக தங்களின் விரும்பத்தின் படியே தங்களின் துணை நடந்துக்கொள்ள வேண்டும் என்ற குணத்தில் உறுதியாக இருப்பது சில நேரங்களில் திருமண வாழ்வில் இவர்களிக் துணைக்கு வெறுப்பு ஏற்பட காரணமாகிவிடும்.
இவர்கள் தங்களின் துணையின் விருப்பங்களுக்கும், தேவைகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்க மறுப்பதால், திருமண வாழ்க்கையில் அதிக பிரச்சினைகளை சந்திக்க நேரிடும்.
தனுசு
தனுசு ராசியில் பிறந்தவர்கள் சுதந்திரம் மற்றும் சாகசத்தை அதிகம் விரும்பும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்கள் யாருக்காகவும் தங்களின் சுதந்திரத்தை ஒருபோதும் இழக்கவே மாட்டார்கள்.
திருமணத்தில், அவர்களின் சுதந்திரத்திற்கான தேவையும், அக்கறையும் துணையின் மன உணர்வுகளை காயப்படுத்தும் நிலை அடிக்கடி ஏற்படக்கூடும்.
அவர்கள் தங்கள் வாழ்க்கைத்துணை உட்பட யாரையும் எளிதில் தங்களின் எல்லைக்கும் அனுமதிக்க மாட்டார்கள். இவர்களின் திருமண வாழ்க்கை பெரும்பாலும் போராட்டங்களும், பிரச்சினைகளும் நிறைந்ததாகவே இருக்கும்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |