ரூ.18 லட்சம் பணப்பெட்டியை தவறவிட்டது ஏன்? பிக்பாஸ் சான்ட்ரா ஓபன் டாக்!
கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட சான்ட்ரா விஜய் தொலைக்காட்சிக்கு வழங்கிய பேட்டியில் பிக்பாஸ் குறித்த எல்லா கேள்விகளுக்கும் வெளிப்படையாக பதிலளித்துள்ளார்.
குறித்த காணொளி தற்போது வெளியயாகி அசுர வேகத்தில் இணையத்தில் பார்வையாளர்களை கவர்ந்து வருகின்றது.
பிக்பாஸ் சீசன் 9
ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று ஒளிபரப்பாகி வரும் ஒரு முக்கிய நிகழ்ச்சியான பிக்பாஸ் 8 சீசன்களை கடந்து, தற்போது 9 ஆவது சீசனை வெற்றிகரமாக ஒளிபரப்பி வருகின்றது.

பிக்பாஸ் தமிழ் சீசன் 9 அடுத்த வாரத்துடன் முடிவடையவுள்ள நிலையில் தற்போது விறுவிறுப்பாக சென்றுக்கொண்டிருக்கின்றது.
கடந்த வாரங்களில் டிக்கெட் டூ ஃபினாலே, டாஸ்க் அதனை தொடர்டந்து பணப்பெட்டி டாஸ்க் என இறுதி கட்டம் மிகவும் பரபரப்பான திருப்பங்களுடன் அரங்கேறிவருகின்றது.

கானா வினோத் டைட்டில் வின்னராக வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் 18 லட்சத்துடன் வெளியேறியது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

அதனை தொடர்ந்து சீசன் 9 இல் இறுதிசுற்றுக்கு செல்லப்போகும் போட்டியாளர்கள் 5 பேர் இல்லை 4 பேர் தான் என அதிரடி முடிவு எடுக்கப்பட்டு, யாரும் எதிர்ப்பார்க்காத வகையில், சான்ட்ரா வெறியேற்றப்பட்டார்.
சான்ட்ரா பணப்பிரச்சினை தான் இந்த போட்டியில் கலந்துக்கொள்ள காரணம் என முன்பே கூறியிருந்தார்.

இவர் தான் பணப்பெட்டியை எடுப்பார் என்று ரசிகர்கள் எதிர்ப்பாத்த நிலையில், கையில் கிடைத்த அருமையான வாய்ப்பை தவறவிட்ட சான்ட்ரா இது குறித்து விஜய் தொலைக்காட்சிக்கு வழங்கிய Exclusive Interview -வில் பகிர்ந்துள்ளார். குறித்த காணொளி தற்போது இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |