ரோபோ சங்கரின் கடைசி ஆசை.. நிறைவேறாமல் போனது ஏன்?
வெள்ளித்திரையில் முக்கிய பிரபலங்களில் ஒருவராக இருந்து மறைந்த நடிகர் ரோபோ சங்கருக்கு நிறைவேறாத ஆசையொன்று இருந்ததாக செய்தி வெளியாகியுள்ளது.
நடிகர் ரோபோ சங்கர்
தமிழ் சினிமாவில் பிரபலமான நகைச்சுவை நடிகர்களில் ஒருவர் தான் ரோபோ சங்கர்.
இவர், கடந்த சில தினங்களுக்கு முன்னர் படப்பிடிப்பு தளத்தில் மயங்கி விழுந்துள்ளார்.
அதன் பின்னர், சென்னை பெருங்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனாலும் அவருக்கு அங்கு மூச்சு விடுவதில் சிரமம் இருந்த காரணத்தினால் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் ஐசியூவிற்கு மாற்றப்பட்டார்.
இருப்பினும் சிகிச்சை பலன் கொடுக்காமல் ரோபோ சங்கர் உயிரிழந்தார்.
இதனை தொடர்ந்து சினிமா மற்றும் சின்னத்திரை பிரபலங்கள் வீடு தேடி வந்து தங்களின் இரங்கலை தெரிவித்து வந்தனர்.
கடைசியாக ரோபோ சங்கர் செய்த விடயம்
இந்த நிலையில், சமூக வலைத்தளங்களில் ரோபோ சங்கர் பற்றிய செய்திகள் அதிகமாகி வெளியாகி வருகின்றன.
அதில், ரோபோ சங்கருக்கு நிறைவேறாத ஆசையொன்று இருப்பதாக கூறப்படுகிறது.
அதாவது, சினிமாவில் சாதாரண நடன கலைஞராக அறிமுகமாகிய ரோபோ சங்கர் நாளடைவில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் அளவுக்கு வளர்ச்சிக் கண்டு விட்டார். தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களாக இருக்கும் அஜித், தனுஷ், சூர்யா போன்ற பலருடன் இணைந்து நடித்திருக்கிறார்.
இப்படி இருக்கும் பட்சத்தில் ரோபோ சங்கருக்கு கமல்ஹாசன் உடன் ஒரு திரைப்படத்தில் சரி நடிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தாக கூறப்படுகிறது. தற்போது திரைப்படங்களில் பிஸியாக இருந்த ரோபோ சங்கர் மறைந்தாலும் அவருடைய நினைவுகள் சமூக வலைத்தளங்களில் மறையாமல் இன்றும் பேசப்பட்டு வருகிறது.
இந்த செய்தி ரசிகர்கள் பலரின் நெஞ்சங்களில் சரிச் செய்ய முடியாத கவலையாக இருந்து வருகிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
