கலசத்தில் வைத்த தேங்காயை என்ன செய்தால் நல்லது? கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க
பொதுவாகவே நவராத்திரியின் முதல் நாளில் கலசம் வைக்கப்படுவது வழக்கம். இந்த கலசத்தில் வைக்கப்படும் தேங்காய் நவராத்திரியின் முடிவில் அதிலிருந்து அகற்றப்பட்டு கலசம் கலைக்கப்படும் என்பது அனைவரும் அறிந்ததே.
நாம் நவராத்திரி தினங்களில் பூஜை செய்த இந்த தேங்காய் துர்கையின் ஆசீர்வாதத்தை ழுழுமையாக பெற்றிருக்கும் என்பது நம்பிக்கை. இவ்வாறு கலசத்தில் வைத்த தேங்காயை என்ன செய்வது? என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
கலச தேங்காயை என்ன செய்வது?
நவராத்திரி பூஜை முடிந்ததும், பூஜைப் பொருட்களை தண்ணீரில் விட வேண்டும். கலசத்தின் மேல் வைக்கப்படும் தேங்காயையும், கலசத்தின் கீழே வைக்கப்பட்டுள்ள அரிசியையும் தண்ணீரில் விட்டுவிட வேண்டும். இப்படிச் செய்வதால் வழிபட்ட பலன்கள் விரைவில் கிடைக்கும் என இந்து சாஸ்திரம் குறிப்பிடுகின்றது.
கலசத்தின் மேல் வைக்கப்படும் தேங்காயை முறையாக அகற்றுவது மிகவும் முக்கியம். ஏனெனில் அதை தவறான முறையில் அகற்றுவது அதை அவமதிப்பதாக கருதப்படும்.
எனவே, நவராத்திரி பூஜைகளின் பின்னர் கலசத்தில் வைக்கப்பட்டுள்ள தேங்காயை சிவப்பு நிற துணியில் சுற்றி, பூஜை செய்யும் இடத்தில் வைப்பது மிகவும் சிறந்தது. இதன் மூலம் துர்கையின் ஆசீர்வாதம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
நீங்கள் விரும்பினால், பூஜையின் போது பெண்களுக்கு தானமாக கலசத்தின் மேல் வைத்திருக்கும் தேங்காயை கொடுக்கலாம். இதுவும் சிறந்த முறையாக கருதப்படுகின்றது. அல்லது பிரசாதமாகவும் பக்தர்களுக்கு கொடுக்கலாம்.
நவராத்திரி பூஜை முடிந்ததும், கலசத்தின் கீழ் அரிசியை வைத்து, கலசத்தில் உள்ள தண்ணீரை வீட்டின் ஒவ்வொரு மூலையிலும் தெளிக்க வேண்டும் இவ்வாறு செய்வதன் மூலம் வீட்டில் நேர்மறை சக்திகள் அதிகரிக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |