இலங்கையர் கடவுச்சீட்டை பெற முதலில் செய்ய வேண்டும்?
பொதுவாக இலங்கையிலிருந்து வேறு நாடுகளுக்கு செல்லும் பயணிகள் முதலில் கடவுச்சீட்டை பெற்றுக் கொள்ள வேண்டும்.
இதற்கு என்ன செய்ய வேண்டும்? யாரை பார்க்க வேண்டும்? இப்படியான விடயங்களை எங்கு தெரிந்து கொள்ளலாம் என சந்தேகத்தில் சிலர் இருப்பார்கள்.
இது போன்ற சந்தேகங்களை இந்த பதிவின் மூலம் தெளிவுப்படுத்திக் கொள்ளலாம்.
அந்த வகையில் இலங்கையில் இருக்கும் பயணிகள் எப்படி ஒரு கடவுச்சீட்டை பெறுவது என்பதனை பார்க்கலாம்.
கடவுச்சீட்டு பெறுவது எப்படி?
1. பயணியின் தேசிய அடையாள அட்டை (NIC ) மற்றும் அதன் Photo Copy (தெளிவாக விளங்க கூடியதாக இருக்க வேண்டும்) 2. பழைய பாஸ்போர்ட் இருப்பின் original and copy.தேவை.
2. பிறப்பு சான்றிதழ் ஒரிஜினல் மற்றும் Photo Copy (6 மாத காலத்திற்குள் Ccertify செய்யப்பட்டது உங்கள் பிரதேச செயலகத்தில் பெறலாம்)
3. Photo Studio Acknowledgment Recipet ( அங்கீகரிக்கப்பட்ட Photo Studio ஒன்றில் சொன்னால் அவர்கள் போட்டோ எடுத்து அவர்களே passport office க்கு computer system வழியே அனுப்புவார்கள். உங்களுக்கு பிரிண்ட் ரிசீட் ஒன்றை தருவார்கள்)
4. Passport அலுவலகம் செல்வதற்கான திகதிக்காக Online வழியே புக்கிங் செய்வது அவசியம்.
5. Passport பெறும் விண்ணப்பம் K35 ஒன்லைனில் பெறலாம்.
முக்கிய குறிப்புகள்
1. ஒரு நாள் சேவை பத்ரமுல்லையில் மாத்திரம் கிடைக்கும்.
2. சாதாரண சேவையை நீங்கள் பத்ரமுல்ல,கண்டி,குருநாகல்,வவுனியா ஆகிய இடங்களில் பெற்றுக் கொள்ளலாம்.
3. முன் பதிவு செய்து விட்டு செல்வது அவசியம். இல்லாவிட்டால் 2 வாரங்களுக்கு பின்னர் தான் Passport ஐ பெற முடியும்.
4. போலியானவர்கள் Agent என கூறி கொண்டு இருப்பார்கள். சற்று கவனமாக இருப்பது அவசியம்.
5. ஒரு நாள் சேவை இரவு 11 மணிக்கு பின்னரும் வழங்கப்படும் என கூறப்படுகின்றது.
கட்டணம் விபரங்கள்
- ஒரு நாள் சேவை -15000/-
-
சாதாரண சேவை - 3500/-