viral video: உடைந்த வாத்து முட்டை குஞ்சு பொரிக்குமா? சாதித்து காட்டிய நபர்!
உடைந்த வாத்து முட்டையை முறையாக பராமரித்து ஆரோக்கியமான வாத்து குஞ்சொன்றை பிறக்க செய்து அதனை வளரத்துக்காட்டி நபரொருவரின் வியப்பூட்டும் முயற்சி அடங்கிய காணொளி தற்போது இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றது.
பொதுவாகவே முட்டை உடைந்துவிட்டால் அந்த முட்டையை வாத்து அடைக்காத்து குஞ்சு பொரிக்காது. காரணம் இயற்கை முறையில் உடைந்த முட்டையில் இருந்து குஞ்சுகள் வெளிவருவது அசாத்தியம்.
ஆனால், நவீன முறையில் வடிவமைக்கப்படும் குஞ்சு பொரிப்பகங்கள், குஞ்சு பொரிப்பகத்தில் மேற்கொள்ளப்படும் பல்வேறு விதமான செயல்பாடுகளுக்கு ஏற்றவாறு பல அறைகளுடன் கட்டப்படுகின்றன.
அவ்வாறு நபரொருவர் உடைந்த முட்டையில் நோய்க்கிருமிகள் பரவுவதை முதலில் தடுத்து, உடைந்த வாத்து முட்டையை முறையாக பராமரித்து ஆரோக்கியமான வாத்து குஞ்சொன்றை பிறக்க செய்துள்ளார்.
குறித்த காணொளி இணையத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |