மாம்பழத்துடன் சேர்த்து என்னென்ன உணவுகளை சாப்பிடக்கூடாது?
இந்த கோடை காலத்தில் மக்கள் அதிகமாக மாம்பழம் சாப்பிடுகின்றனர். ஆனால் மாம்பழத்துடன் சாப்பிடக்கூடாத பொருட்களும் உள்ளது.

மாம்பழம்
தற்போது இந்த கோடைகாலத்தில் மாம்பழங்களுக்கு குறைவில்லாமல் இருக்கும். இதனால் மாம்பழங்களை எல்லோரும் விரும்பம் போல சாப்பிட்டு மகிழ்வார்கள்.
ஆனால் தவறான உணவுச் சேர்க்கைகள் உங்கள் உடல் நலத்திற்குத் தீங்கு விளைவிக்கும். மேலும் இந்த உணவு சேர்க்கை மாம்பழத்தில் உள்ள சேர்மானங்களோடு கலக்கும் போது அது உடலில் நச்சுக்களை உண்டாக்கும்.

ஆயுர்வேதத்தின்படி, மாம்பழங்களுடன் சில உணவுகளைச் சேர்த்து உண்பது, திடீரென உடல் சூட்டையும் அமிலத்தன்மையையும் அதிகரிக்கக்கூடும்.
மாம்பழம் சாப்பிட்ட பிறகு நீங்கள் என்னென்ன உணவுகளை உண்ணக்கூடாது என்று தெரிந்துகொள்வோம்.

எதை சேர்த்து சாப்பிட கூடாது?
தயிர்
- மாம்பழம் மற்றும் தயிர் கலவையானது செரிமானத்தைப் பாதிக்கும். மாம்பழம் உடலுக்கு வெப்பமூட்டும் தன்மையையும், தயிர் குளிர்ச்சியூட்டும் தன்மையையும் கொண்டுள்ளது. இந்தக் கலவை வயிற்றுக்குள் செல்லும்போது, செரிமான செயல்முறையை மெதுவாக்கி, வயிறு உப்புசம், வாயு மற்றும் அமிலத்தன்மைக்கு வழிவகுக்கிறது. இது சருமப் பிரச்சனைகளுக்கும் வழிவகுக்கலாம்.

குளிர் பானங்கள்
- மாம்பழம் சாப்பிட்ட உடனேயே குளிர் பானங்கள் அருந்துவதைத் தவிர்க்கவும். அவ்வாறு செய்வது உங்கள் இரத்தச் சர்க்கரை அளவை அதிகரிக்கக்கூடும். மாம்பழங்களில் உள்ள இயற்கையான சர்க்கரையும், குளிர் பானங்களில் உள்ள செயற்கை சர்க்கரையும் இணைந்து, இரத்தச் சர்க்கரை அளவை இன்னும் வேகமாக அதிகரிக்கின்றன.
பாகற்காய் மற்றும் காரமான உணவுகள்
- மாம்பழம் சாப்பிட்ட உடனேயே பாகற்காய் அல்லது வேறு எந்த காரமான காய்கறியையும் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். இந்தச் சேர்க்கை செரிமான அமைப்பைப் பாதித்து, வாந்தி மற்றும் மூச்சுத்திணறலை ஏற்படுத்தக்கூடும்.
- மாம்பழங்களைச் சாப்பிடுவதற்கு முன், அவற்றை 2-3 மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்த பின்னரே சாப்பிட வேண்டும். இது மாம்பழங்களைக் குளிர்விப்பதோடு, அதிலுள்ள அமிலத்தையும் நீக்குகிறது. இந்த அமிலம் உங்கள் சருமத்திற்கும் வயிற்றுக்கும் பாதுகாப்பானது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |