ஏழு நாட்களுக்குத் தினமும் பீட்ரூட் சாறு குடித்தால் என்ன பலன்?
பீட்ரூட் சாறு ஒரு வாரத்திற்கு தொடர்ந்து குடித்தால் உடலுக்கு என்ன நன்மை என்பதை பார்க்கலாம்.

பீட்ரூட் சாறு
நன்மைகள் கிடைக்கும்
பீட்ரூட் சாறு (Beetroot Juice) நைட்ரேட்டுகள், வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்த ஒரு ஆரோக்கியமான பானமாகும்.
இது இரத்த அழுத்தத்தைக் குறைக்கவும், இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், தடகள செயல்திறனை அதிகரிக்கவும் உதவுகிறது. மேலும், இது சரும பொலிவு மற்றும் கல்லீரல் ஆரோக்கியத்திற்கும் மிகவும் நல்லது.
சிலர் பீட்ரூசாறு குடித்தால் உடனே பலன் கிடைக்காது. இதை தொடர்ந்து ஏழு நாள் குடித்தால் நல்ல பலன் கிடைக்கும்.

அழற்சியைக் குறைக்கிறது
- பீட்ரூட்டில் பீட்டாலைன் என்ற சக்திவாய்ந்த ஆன்டிஆக்ஸிடன்ட் உள்ளது. இந்தச் சேர்மம் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது. ஒரு ஆய்வில், பீட்ரூட்டைத் தொடர்ந்து சாப்பிடுவது அழற்சியை குறைக்கும். அழற்சி குறைவது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. மூட்டு வலியைப் போக்குகிறது மற்றும் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது.
கல்லீரல் நச்சு நீக்கம்
- ஒரு வாரம் பீட்ரூட் சாறு குடிப்பது கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. பீட்ரூட்டில் உள்ள சேர்மங்கள் குளுடாதையோனை அதிகரிப்பதன் மூலம் கல்லீரலில் உள்ள நச்சுக்களை நீக்க உதவுகின்றன. குளுடாதையோன் என்பது உடலில் உள்ள நச்சுக்களைச் செயலாக்க உதவும் ஒரு சக்திவாய்ந்த ஆன்டிஆக்ஸிடன்ட் ஆகும்.

மூளைக்கும் வயிற்றுக்கும் நன்மை பயக்கும்
- பீட்ரூட் சாறு குடிப்பது இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, மூளைக்குச் செல்லும் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. பீட்ரூட் சாற்றில் உள்ள நார்ச்சத்து ஒரு ப்ரீபயாட்டிக்காகச் செயல்படுகிறது. இது குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்களுக்கு (லாக்டோபேசிலஸ் போன்றவை) உணவளித்து, செரிமான அமைப்பை வலுப்படுத்தி, மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளைத் தடுக்கிறது.
எப்போது குடிக்க வேண்டும்?
தினமும் சுமார் 100-200 மில்லி பீட்ரூட் சாறு அருந்துவது உடல் நலத்திற்கு நன்மை பயக்கும் என்று கருதப்படுகிறது. இதை காலையில் வெறும் வயிற்றில் அல்லது உடற்பயிற்சிக்கு 30-60 நிமிடங்களுக்கு முன்பு குடிப்பது சிறந்தது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |