சாணக்கிய நீதி: இந்த விடயங்களை மற்றவர்களிடம் சொல்வது மிகவும் ஆபத்தானது... ஏன்னு தெரியுமா?
முன்னைய காலத்தில் இந்தியாவின் புகழ்பெற்ற அறிஞர், ஒரு சிறந்த இராஜதந்திரி மற்றும் ஒரு தலைசிறந்த பொருளாதார நிபுணராக திகழ்ந்து உலகம் முமுவதும் பிரபல்யம் அடைந்தவர் தான் சாணக்கியர்.
இவர் தனது வாழ்க்கையில் கடைப்பிடித்த பல்வேறு விடயங்கள் மற்றும் வாழ்க்கையில் சந்தித்த சவால்கள் மற்றும் அனுபவங்களின் தொகுப்பே சாணக்கிய நீதி ஆகும்.
இன்றும் உலகளவில் சாணக்கிய நீதியை பின்பற்றுபவர்கள் ஏராளம். சாணக்கிய நீதியின் அடிப்படையில் ஒரு மனிதன் வாழ்வில் யாரிடமும் பகிர்ந்துக்கொள்ளவே கூடாத விடயங்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
பலவீனங்கள்
சாணக்கிய நீதியின் அடிப்படையில் ஒருவர் தனது பலவீனத்தைப் பற்றி யாரிடமும் சொல்லக்கூடாது. நமது பலவீனங்களை மற்றவர்களிடம் பகிர்ந்துக்கொள்வதால் அவமானத்தை சந்திக்க வேண்டியேற்படும் மேலும் அதனை மற்றவர்கள் நமக்கு எதிராக பயன்படுத்த கூடிய நிலை ஏற்படலாம்.
குடும்ப ரகசியங்கள்
சாணக்கியரின் கூற்றுபடி வீட்டு விஷயங்களை மற்றவர்களிடம் தவறியும் சொல்ல கூடாது. இதனால் உங்கள் குடும்பத்தினர் அவமானத்தை சந்திக்க நேரிடும். மேலும் உங்கள் உறவில் ஏற்படும் விரிசல்களை மற்றவர்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ளும் நிலை ஏற்படலாம்.
உங்களின் கவலைகள்
சாணக்கிய நீதியின் அடிப்படையில் தங்களின் கவலைகளை யாரிடமும் சொல்ல கூடாது. நமது கவலைகளை மற்றவர்களிடம் சொல்லும் போது அவர்கள் அதை மற்றவர்களிடம் கூறி கேலி செய்யும் நிலை ஏற்படலாம். அதனால் முடிந்தவரை நமது கவலைகளை நாமே சரிசெய்துக்கொள்ள முயற்சிப்பதே சிறந்தது என்கின்றார் சாணக்கியர்.
மனைவியின் குணம்
சாணக்கிய நீதியின் கூற்றுப்படி, கணவன் தன் மனைவியின் மோசமான குணத்தைப் பிறர் முன்னிலையில் ஒருபோதும் வெளிப்படுத்தவே கூடாது. இது கணவன் மனைவி உறவை வலுவாக பாதிக்கும். இதனால் எதிர்காலத்தில் பல்வேறு பிரச்சினைகளை சந்திக்க நேரிடும்.
நிதிநிலை
சாணக்கிய நீதியின் படி, ஒரு நபர் பணத்தை இழந்த செய்தியை யாரிடமும் பகிர்ந்து கொள்ளக்கூடாது. காரணம் அதனை மற்றவர்களிடம் சொல்வது உங்களுக்கு கிடைக்க இருக்கும் உதவிகளையும் கூட நிறுத்தி விடுவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தும். எனவே பணத்தை இழந்த விடயத்தை ஒரு போதும் யாரிடமும் பகிரவே கூடாது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW |