ருத்ராட்சம் அணிபவரா நீங்கள்? அப்போ இதையெல்லாம் தவறியும் பண்ணாதீங்க
இந்து மத நம்பிக்கைகளின் பிரகாரம் ருத்ராட்சம் மிகவும் புனிதமானதாக பார்க்கப்படுகின்றது. ஆதியும் அந்தமும் இல்லாத சிவபெருமானின் வடிவமாகவே இந்துக்கள் ருத்ராச்சத்தை கருதுகின்றனர்.
அதனை அணிவதால் பல நன்மைகள் நம்மை வந்தடையும் என நம்பப்படுகின்றது. மத நம்பிக்கைகளின் பிரகாரம் ருத்ராட்சம் சிவபெருமானின் கண்ணீரில் இருந்து உருவானதாக கூறப்படுகிறது.
சாஸ்திரத்தில், ருத்ராட்சத்தை அணிபவரின் உடலில் இருந்து எதிர்மறை ஆற்றல்கள் வெளியேறுவதாக கூறப்படுகின்றன.
அந்தவகையில், ருத்ராட்சம் அணியும்போதும், அணிந்த பிறகும் சில விதிகளைப் பின்பற்றுவது மிகவும் முக்கியமாகும்.அப்படி ருத்ராச்சம் அணிபவர்கள் தவறியும் செய்யபக்கூடாத விடயங்கள் என்னென்ன என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
ருத்ராட்சம் அணியக்கூடாத சந்தர்ப்பங்கள்
இறந்த இடத்திற்கோ அல்லது தகனம் செய்யும் இடத்திறகோ தவறியும் ருத்ராட்சத்தை அணிந்து செல்லவே கூடாது.
இறைச்சி உட்கொள்ளும் போதும் மது அருந்தும் போதும் ருத்ராட்சம் அணிய கூடாது. மேலும் பிறந்த குழந்தை இருக்குமிடம் அல்லது பிறந்த குழந்தையை பார்க்க செல்லும் போது ருத்ராட்சம் அணியக்கூடாது.
தூங்கும்பொழுதும், படுக்கையில் இருக்கும் போதும் ருத்ராட்சம் அணியக்கூடாது.
ருத்ராட்சம் அணிவதால் செல்வம் பெருகும் என்பதும் சிவனின் ஆசீர்வாதம் முழுமையாக கிடைக்கும் என்பது ஐதீகம்.ருத்ராட்சம் அணிபவர்கள் ஒரு வாரத்திற்கு ஒரு முறை அதற்கு பூஜை செய்து அணிவது சிறப்பு வாய்ந்தது.
அதிகபட்சம் ஒரு மாதத்திற்கு ஒருமுறையாவது பிரதோஷம் அல்லது திங்கட்கிழமைகளில் பூஜை செய்து அணிய வேண்டும். அப்போது ருத்ராச்சத்தின் சக்தி மேலும் அதிகரிக்கும்.
அபிஷேகம் செய்யும் முன்னர் ருத்ராட்சத்தைப் பன்னீரில் ஒரு நாள் முழுவதும் ஊற வைத்து பூஜை செய்து அணிந்து கொள்வதால் நேர்மறை ஆற்றல் அதிகரிக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |