இந்த விடயங்களை யாரிடமும் சொல்லாதீங்க... எச்சரிக்கும் சாணக்கியர்!
பண்டைய காலத்தில் இந்தியாவின் புகழ்பெற்ற அறிஞர், ஒரு சிறந்த இராஜதந்திரி மற்றும் ஒரு தலைசிறந்த பொருளாதார நிபுணராக திகழ்ந்து உலகம் முழுவதும் பிரபல்யம் அடைந்தவர் தான் ஆச்சாரிர் சாணக்கியர்.
இவரின் கொள்கைகளுக்கு உலகம் முழுவதிலும் இன்றளவும் மவுசு குறையவே இல்லை. இவர் தனது வாழ்க்கையில் கடைப்பிடித்த பல்வேறு விடயங்கள் மற்றும் வாழ்க்கையில் சந்தித்த சவால்கள் மற்றும் அனுபவங்களின் தொகுப்பே சாணக்கிய நீதி.
சாணக்கிய நீதியை பின்பற்றியவர்கள் இன்றும் பின்பற்றுபவர்கள் என ஏறாளம் போர் இருக்கின்றனர். வாழ்வில் வெற்றியடைந்த பலபேருக்கு இது ஒரு சிறந்த வழிக்காட்டியாக இருந்துள்ளது என்றால் மிகையாகாது.
சாணக்கிய நீதியில் இருந்து திரட்டப்பட்ட தகவல்களின் அடிப்படையில் வாழ்வில் வெற்றியடைய வேண்டும் என்றால் நாம் குறிப்பிட்ட சில விடயங்களை எப்போதும் தனிப்பட்ட ரீதியில் ரகசியமாக வைத்துக்கொள்ள வேண்டியது அவசியமாகும்.
அந்த வகையில் யாரிடமும் பகிர்ந்துக்கொள்ள கூடாத விடயங்கள் என்னென்ன என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
இலட்சியங்கள்
மனிதர்களாக பிறப்பது மிகப்பெரிய வரம் அப்படி மனித பிறவி கிடைத்திருக்கின்றது என்றால் ஏதாவது ஒரு விடயத்தில் சாதிக்க வேண்டும் எனவே நிச்சயம் இலட்சியம் இருக்க வேண்டும்.
சாணக்கியரின் கூற்றின் அடிப்படையில் நமது இலட்சியங்களை நிறைவேறும் வரையில் யாரிடமும் பகிர்ந்துக்கொள்ள கூடாது என்கின்றார்.
நீங்கள் மற்றவர்களிடம் இலட்சியத்தை பகிரும் பட்சத்தில் உங்கள் முன்னேற்றத்தை தடுக்க நினைப்பவர்களுக்கு அது மிகப்பெரும் வாய்ப்பாக இருக்கும்.
அது மட்டுமன்றி உங்கள் நம்பிக்கைகை குறைக்கும் வகையில் யாராவது பேசினால் சில நேரங்களில் நீங்கள் இலட்சியத்தை கைவிட நேரிடலாம் எனவே நெருங்கிய நண்பர்களிடம் கூட இலட்சியத்தை பகிர கூடாது என்கின்றார் சாணக்கியர்.
நிதி நிலை
சாக்கிய நீதியின் பிரகாரம் உங்கள் நிதி நிலை தொடர்பில் உறவினர்கள் நண்பர்கள் என யாரிடமும் பகிர்ந்துக்கொள்ள கூடாது.
பணம் அதிகமாக இருந்தாலும் சரி பணத்திற்கு கஷ்டப்படும் நேரங்களிலும் சரி அது குறித்து யாரிடமும் சொல்லுவதை தவிர்க்க வேண்டும்.
சேமிப்பு மற்றும் வருமானம் தொடர்பான விடயங்களை ரகரியமாக வைத்திருபவர்களே வாழ்வில் வெற்றியடைய முடியும் என்கின்றார் சாணக்கியர்.
தனிப்பட்ட சிக்கல்கள்
பொதுவாகவே அனைவருக்கும் தனிப்பட்ட சில பிரச்சினைகள் நிச்சயம் இருக்கும். அதனை யாரிடமும் பகிர்ந்து கொள்ளாதீர்கள் என சாணக்கியர் எச்சரிக்கின்றார்.
ஏனெனில் உங்களின் பிரச்சினைகளை மற்றவர்கள் சில சமயங்களில் உங்களுக்கு எதிராகவும் பயன்படுத்திக்கொள்ள முடியும் என்பதால் தனிப்பட்ட விடயங்களில் எப்போதும் இரகசியம் காக்க வேண்டியது முக்கியம்.
நம்பிக்கைகள்
உங்கள் நம்பிக்கைகள் குறித்த எப்போதும் மற்றவர்களிடம் பகிர்ந்துக்கொள்ள கூடாது என்கின்றார் சாணக்கியர். இது உங்கள் பாதுகாப்புக்கு அச்சுருத்தலாக அமையும்.
மேலும் மற்றவர்கள் உங்கள் நம்பிக்கையை உடைக்கும் வகையில் பேசுவதாலும் அவ்வாறான செயல்களில் ஈடுப்படுவதாலும் நீங்கள் மனமுடைந்து போகக்கூடிய சூழல் உருவாகலாம்.
உறவுகள்
உங்கள் உறவுகள் குறித்த முழு விபரங்களையும் மற்றவர்களுடன் பகிர்ந்துக்கொள்வதை தவிர்க்க வேண்டும் என்கின்றார் சாணக்கியர். உலகில் சரியான உறவு என்று எதுவும் கிடையாது. உங்களுக்கு சரியாக தோன்றும் உறவு மற்றவர்களுக்கு தவறாக தோன்றலாம்.
காதலி-காதலன் அல்லது கணவன்-மனைவி போன்ற உறவுகள் மிகவும் பொதுவான உறவுகளாக இருக்கின்ற போதிலும் அதனை அனைவரிடமும் பகிர வேண்டும் என்ற அவசியம் கிடையாது. இது உங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என சாணக்கிய நீதி குறிப்பிடுகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |