முன்னரே எடுக்கப்பட்ட காட்சியை இப்போ வெளியிட்டாரா நயன்? குழந்தைகளை பார்த்து குழப்பமடைந்த ரசிகர்கள்
நடிகை நயன்தாரா குழந்தைகளை வைத்து முன்னரே எடுக்கப்பட்ட காட்சியை இப்போது வெளியிட்டு ரசிகர்களை சற்று குழப்பமடைய வைத்துள்ளார்.
நயன்தாரா
தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் தான் நடிகை நயன்தாரா.
இவருக்கு இணையாக இன்று வரை தமிழ் சினிமாவில் யாரும் இல்லை என சினிமா வட்டாரங்கள் முனுமுனுத்து வருகிறார்கள்.
இவர் தமிழ் சினிமாவில் இருக்கும் அனைத்து முன்னணி நடிகர்களுடன் நடித்த இவர், சுமார் 20 வருடங்களுக்கு மேலாக சினிமாவில் நடித்து வருகிறார்.
இதனை தொடர்ந்து,“ நானும் ரௌவுடி தான்” திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள்.
குழந்தைகளை பார்த்துருக்கீங்களா?
இந்த நிலையில் தற்போது இவர்களுக்கு அழகிய இரண்டு ஆண் குழந்தைகள் இருக்கிறார்கள்.
டுவிட்டர் பக்கம் ஆக்டிவாக இருந்த நயன்தாரா தற்போது இன்ஸ்டா பக்கத்திற்கு என்றி கொடுத்துள்ளார்.
முதன் முதலாக அவரின் மகன்களின் வீடியோக்காட்சியை வெளியிட்டுள்ளார்.
ஆனால் ஓணம் பண்டிகையின் போது எடுக்கப்பட்ட புகைப்படத்திற்கு தற்போது எடுக்கப்பட்ட வீடியோக்காட்சிக்கு நிறைய வேறுபாடுகளை ரசிகர்கள் கண்டுபிடித்துள்ளார்கள்.
பல குழப்பங்களுக்கு மத்தியில் ரசிகர்கள்
அந்த வகையில், திருமண நாளன்று குழந்தைகளின் புகைப்படத்தை விக்னேஸ் சிவன் வெளியிட்டுள்ளார். அதில் பார்க்கும் போது குழந்தை மிகவும் சிறியவர்களாக இருக்கிறார்கள். ஆனால் ஓணம் பண்டிகையின் போது வெளியிட்ட புகைப்படத்தில் பெரியவர்களாக இருக்கிறார்.
இந்த விடயம் ரசிகர்களை சற்று குழப்பமடைய வைத்துள்ளது. குழந்தைகளை ரசிகர்களுக்கு காட்ட வேண்டும் என்றால் தற்போது உள்ளது போல் வீடியோ எடுத்து பதிவு செய்யலாம் தானே.. ஏன் இவர்கள் முன்னரே எடுக்கப்பட்ட காட்சியை இப்போது வெளியிட்டுள்ளார்கள்.
அப்படியாயின் குழந்தைகளை வெளியில் காட்ட வேண்டும் என்ற எண்ணம் நயனுக்கு இல்லை. மாறாக ஜவான் படத்தை பிரமோஸன் செய்வதற்காக தான் நயன்தாரா இன்ஸ்டா பக்கம் வந்தாரா? இப்படி ஏகப்பட்ட கேள்விகள் ரசிகர்கள் மத்தியில் எழுந்து வருகின்றன.
நயன்தாரா இன்ஸ்டாகிராம் வருவார் என யாரும் எதிர்பார்க்காத நிலையில், “ நா வந்துட்டேனு சொல்லு..” என கருத்து குறிப்பிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |