யார் அந்த பூச்சாண்டி! உண்மையான அர்தத்தம் என்னன்னு தெரியுமா?
பொதுவாகவே தொன்று தொட்டு குழந்மைகளை வெளியில் செல்லாமல் பயம் காட்டி வைப்பதற்கும், சாப்பிட வைப்பதற்கும் பூச்சாண்டி வருவான் என்று சொல்லும் வழக்கம் காணப்படுகின்றது.
இந்த பூச்சாண்டி என்ற வார்த்தையை கேட்காத குழந்தைகளே இருக்க முடியாது. அந்நதளவுக்கு தமிழர்கள் மத்தியில் பெரும்பாலும் அறியப்பட்ட இந்த சொல்லுக்கு உண்மையில் என்ன அர்த்தம் என்பது பெரும்பாலானர்களுக்கு தெரியாது.
குழந்தைகளுக்கு அச்சமுண்டாக்கும் உருவத்தை குறிக்கும் அந்த பூச்சாண்டி என்ற சொல்லுக்கும் சிவபக்தர்களுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கின்றது என்றால் உங்களால் நம்ப முடிகின்றதா?
ஆம் குழந்தைகளை அச்சத்தில் ஆழ்த்தும் இந்த வார்த்தையின் உண்மையாக அர்த்தம் சிவபக்தர் என்பது தானாம். அதற்கான முழுமையான விளக்கத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.
பூச்சாண்டி என்ற பெயர் எப்படி உருவானது?
1700 ஆண்டுகளுக்கு முன்னர் அதாவது கி.மு 3 ஆம் நூற்றாண்டுகளில் தமிழகத்தை ஆண்ட கலப்பின மன்னர்களாக கன்னடத்தை சேர்ந்த மன்னர்கள் ஆண்டார்கள்.
இவர்கள் சமண மதத்தையும், பௌத்த மதத்தையும் ஆதரித்தன் காரணமாக அதனை மட்டுமே பரப்ப வேண்டும் என முடிவு செய்து சைவ மற்றும் வைணவ மதங்களுக்கு தங்களின் வலுவான எதிர்பை காட்டினார்கள்.
அந்த மன்னர்கள் சைவர்களின் சிவ வழிபாட்டுக்கு தடை விதித்து யாரும் சிவனை வழிப்பட கூடாது என்றும், திருநீரு அணிய கூடாது என்றும் கடுமையான சட்டங்களை நடைமுறைப்படுத்தினார்கள். அதற்று எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சிவ பக்தர்கள் தங்களின் உடல் முழுவதும் திருநீரு (பூச்சு) பூசிக்கொண்டுடார்கள்.
இப்படி சிவ பக்தர்கள் அதாவது சிவன் ஆண்டிகள் வீதியில் வரும் போது, அங்குள்ள மக்கள் அவர்களை பார்த்ததால், மன்னரின் தண்டனைக்கு ஆளாக நேரிடும் என பயந்து குழந்தைகளிடம் பூச்சு அணிந்துக்கொண்டு ஆண்டி வரான் என குறிப்பட்டது, காலப்போக்கில் பூச்சாண்டி என மாற்றம் பெற்றது.
அதாவது சைவ ஆண்டிகளை குறித்த சொல். உடல் முழுவதும் சாம்பல் மற்றும் திருநீர் பூசி அப்பூச்சுடன் இருந்த ஆண்டிகளை திருநீர் பூச்சு ஆண்டி என குறிப்பிட்டது, பின்னாளில் பூச்சாண்டி மருவியது.
இதுவே பின்னர் பயங்கரமான உருவத்தில் இருக்கும் அனைத்தும் பூச்சாண்டி என்ற பெயரால் அழைக்கப்பட காரணமாக அமைந்துள்ளது. பூச்சாண்டி என்பதன் உண்மையான அர்த்தம் சிவபக்தர் என்பது தான்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |