பூமியின் மிக பழமையான கல்! ஆனால் வைரமில்லை-இப்போது எங்கு கிடைக்கும்?
பூமியில் கண்டுபிடிக்கப்பட்ட மிகப் பழமையான பொருள் எது என்பது பற்றிய தகவல் இப்போது வைரலாகி வருகின்றது. இதை பற்றிய முழு விபரத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.
உலகின் பழைமையான பொருள்
பூமியில் பல அதிசயங்கள் நிரம்பி இருக்கின்றன. அதாவது பூமி தோன்றிய காலத்தில் இருந்து சில பொருட்களும் உயிரினங்களும் தோன்றியதாக பூமியின் வரலாறு உள்ளது.
மற்போது ஆராய்ச்சி செய்த விஞ்ஞானிகள் நீல நிறத்தில் ஒளிரும் சிர்கான் படிகத்தை கண்டுபிடித்துள்ளனர், இது சுமார் 4.4 பில்லியன் ஆண்டுகள் பழமையானது என்று கூறப்படுகிறது.
இந்த கல் மேற்கு ஆஸ்திரேலியாவில் ஜாக் ஹில்ஸ் என்ற பாறையில் கண்டுபிடிக்கப்பட்டது. இதை 2014 இல் ஆய்வு செய்ததன் மூலம் இது சுமார் 4.39 பில்லியன் ஆண்டுகள் பழமையானது என தெரியவந்துள்ளது.
இந்த கற்கள் மிகவும் அரிதானவை. இது ஒரு கனிமமாகும். இது மாக்மா குளிர்ச்சியடையும் போது உருவாகிறது. இந்த கற்களில் இருந்து நீல ஒளி வெளிவரும்.
இது எத்தனை பில்லியன் ஆண்டுகள் ஆனாலும் அப்படியே இருக்கும். இந்த கற்களை வெறும் கண்களால் பார்க்க முடியாது.பூமி செவ்வாய் போன்ற கிரகத்துடன் மோதி 10 மில்லியன் ஆண்டுகளுக்குப் பிறகு இந்த படிகம் உருவானது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |