வெற்றியின் ரகசியம்: உங்க வயது முக்கியமல்ல... உங்க உளவியல் வயது தெரியுமா?
பொதுவாகவே இந்த உலகில் மனிதனாக பிறந்த அனைவரும் சாதிக்க வேண்டும் என்ற ஆசையை கொண்டிருக்கின்றார்கள் என உளவியல் நிபுணர்கள் குறிப்பிடுகின்றது.
இருப்பினும் புற சூழவில் நமக்கும் பல்வேறு காரணங்களால் பெரும்பாலானவர்கள் காலப்போக்கில் தங்களின் இலக்குகளை தியாகம் செய்துவிடுகின்றனர் அல்லது வாழ்க்கையை மாற்றிக்கொள்கின்றனர்.
வாழ்க்கையில் சாதிக்க வேண்டும் என்றால் நீங்கள் இளமையாக இருந்தாலும் உங்களின் உளவியல் வயது உங்களின் வயதை விடவும் அதிகமாக இருக்க வேண்டும் என்றால் உங்களால் நம்ப முடிகின்றதா?
ஆம் உங்களின் வயது வேறு உளவியல் வயது என்பது வேறு... பெரும்பாலானவர்களின் வயதும் அவர்களின் உளவியல் வயதும் ஒன்றாகவே இருக்கின்றது.
ஆனால் தங்களின் வயதை விடவும் உளவியல் வயது அதிகமாக இருப்பவர்கள் மாத்திரமே வாழ்கையில் வெற்றிகளை குவிக்கின்றனர்.
இந்த நிலையை அடைந்தால் சாதிப்பது மிகவும் எளிதாகிவிடும். உங்களின் உளவியல் வயதை அதிகரிக்க என்ன செய்ய வேண்டும் என்பது குறித்த முழுமையாக விளக்கத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.
குணங்கள் - உளவியல்
வயது உதாரணமாக உங்களின் வயது 25 என்று வைத்துக்கொள்வோம். இந்நிலையில் நீங்கள் புதிதாக ஒரு விடயத்தை கற்றுக்கொள்ள ஆரம்பிக்கின்றீர்கள் என்றால், அதை பற்றி முழுமையாக கற்று தெரிந்தக்கொள்ளும் முன்னரே நீங்கள் அனைத்ததையும் கற்று தேர்ந்தவர் போல் மற்றவர்களிடம் சொல்லிக்கொள்கின்றீர்கள் என்றால்,
உங்களின் உளவியல் வயது 10 தொடக்கம் 15 இற்குள் தான் இருக்கின்றது என்று அர்த்தம்.இந்த குணம் உங்களின் வயதை விடவும் குறைந்த வயதுக்கு இட்டுச்செல்கின்றது. அதனால் வாழ்க்கையில் எதையும் சாதிக்க முடியாத நிலையில் இருப்பீர்கள்.
உங்களின் 25 ஆவது வயதிலும் உங்களின் நண்பர்கள் உங்களை பற்றி புறம் பேசுகின்றார்கள் என்று அறிந்தால், அதனால் மிகுந்த மனவருத்தம் அடைந்து மற்றவர்களிம் நீங்கள் நல்லவர் என்பதை நிரூபிக்க அதிக பாடுபடுகின்றீர்கள் என்றால்,
உங்களின் உளவியல் வயது 15 தொடக்கம் 20 இற்குள் இருக்கின்றது என்று அர்த்தம்.இந்த குணமும் உங்களின் சாதனைகளுக்கு மிகப்பெரும் தடையாக இருக்கும்.
இதுவே உங்களின் 25 ஆவது வயதிலும் மற்றவர்கள் உங்களை பற்றிய தவறான கருத்துக்களை பகிரும் போது யாரிடமும் சொல்லாமல், மனதளவில் காயப்படுகின்றீர்கள் அல்லது தனிமையில் அழுகின்றீர்கள் என்றால்,
உங்களின் உளவியல் வயது 30யை தாண்டிவிட்டது என்று அர்த்தம். இந்த நிலையில் வெற்றிக்காக போராடும் நிலையில் இருப்பீர்கள் சற்று முயற்ச்சி செய்தால் வெற்றியடையலாம்.
ஆனால் உங்களின் 25 ஆவது வயதில் மற்றவர்கள் உங்களின் முன்னிலையிலேயே உங்களை தவறாக பேசினாலும், அசிங்கப்படுத்தினாலும் அதனை பொருட்படுத்தாது உங்களின் வேலையில் கவனம் செலுத்துகின்றீர்கள் என்றால்,
உங்களின் உளவியல் வயது 45 யை கடந்து விட்டது என்று அர்த்தம். இந்த நிலையில் சாதனை மிகவும் எளிமையான விடயமாக மாறியிருக்கும். அதுவே வாழ்வில் சாதித்த பலரின் வெற்றியின் ரகசியமாகவும் இருந்துள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |