இந்த எண்ணில் பிறந்தவரா நீங்க? அடுத்த வருடம் ஜாக்போட் தான்
இன்னும் சில நாட்களில் 2026-ஆம் ஆண்டு பிறக்கப்போகிறது.
பிறக்கப்போகும் புத்தாண்டு எப்படி இருக்கப்போகிறது என்பதை தெரிந்து கொள்ள பலரும் ஆர்வமாக இருப்பார்கள். ராசியை வைத்து ஒரு ஆண்டு எப்படி இருக்கும் என்பதை எப்படி கூறுகிறோமோ அதே போன்று எண்கணித முறைப்படி ஒருவரின் பலன்களை கண்டறியலாம்.
சூரியன் ஆளப்போகும் அடுத்த வருடத்தில் எண் 1-ல் பிறந்தவர்களின் ஆளுமை நிறைந்திருக்கும் காலமாக அமையும் எனக் கூறப்படுகிறது.
அத்துடன், தன்னுடைய இலக்கை நோக்கி பயணிப்பவர்கள் அடுத்த வருடம் உங்களுடைய முயற்சியை துவங்கலாம். இது உங்கள் வாழ்க்கையின் எதிர்பாராத திருப்பங்களை கொண்டு வரும்.
அந்த வகையில், எண் கணித நிபுணர்கள் கூற்றுப்படி 2026 ஆம் ஆண்டில் ரேடிக்ஸ் எண் 5 கொண்டவர்களுக்கு எப்படி இருக்கும் என்பதை பதிவில் விளக்கமாக பார்க்கலாம்.

தொழில் வாழ்க்கை
எண் 5-ல் பிறந்தவர்கள் தொழில் வாழ்க்கை மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை இரண்டிலும் அடுத்த வருடம் முதல் ஆக்டிவாக இருப்பார்கள். புதிய தொழில் துவங்கும் அதிர்ஷ்டமும் இருக்கிறது. என்ன தான் கஷ்டமாக இருந்தாலும் புதிய முயற்சியொன்றை துவங்கினால் அதனை இறுதி வரை விடாமல் இருப்பது நல்லது.

உங்களின் குடும்பம் உங்களை பார்த்து மகிழ்ச்சியடைவார்கள். உங்களுடைய குடும்பத்தினருடன் முடிந்தளவு நேரத்தை செலவு செய்யுங்கள். ஆரோக்கியமான தொழில் வாழ்க்கை அமையும் அதனை சரியாக பயன்படுத்திக் கொண்டு மேல் எழும் நபராக உங்களை மாற்றிக் கொள்ளுங்கள்.
காதல்
நீண்ட காலமாக ஒரு துணையில்லாமல் தனியாக இருப்பவர்களுக்கு புத்தாண்டில் ஒரு துணை கிடைக்கும். உங்களுடைய பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொண்டு இவர்கள் நடந்து கொள்வார்கள். காதல் உறவை தொடங்கும் முன்னர் அவர் பற்றிய புரிதல் உங்களிடம் அவசியம் இருக்க வேண்டும்.

கலாச்சார நிகழ்ச்சியொன்றில் உங்களுடைய துணையை சந்திக்க வாய்ப்பு உள்ளது. எதிர்பாராத ஒரு சந்திப்பு காதலாக மாறி, திருமணத்தில் முடியும். திடீர் தம்பதிகளான உங்களை பார்த்து நண்பர்கள் வாயடைத்து போவார்கள்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).