உடலில் அதிகம் அழுக்கு நிறைந்த பகுதி எது தெரியுமா? இங்குதான் பக்டீரியா அதிகமாக இருக்கும்!
பொதுவாகவே அனைவரும் தினசரி குளிப்பதற்கு காரணம் உடலில் உள்ள பக்டீரியாக்களை நீக்கி உடலை சுத்தப்படுத்துவதற்காகவே ஆகும்.
இதுமட்டுமன்றி உடலில் உள்ள துர்நாற்றங்களை போக்க தான் சோப்பு, ஷாம்பு மற்றும் வாசனை பொருட்கள் என அனைத்தையுமே பயன்டபடுத்துகின்றோம். ஆனால் இவ்வளவு செய்தும் நம் உடவில் அழுக்கு நிறைந்த பகுதி ஒன்று இருக்கிறது என்றால் உங்களால் நம்ப முடிகின்றதா?
ஆம் எவ்வளலு குளித்தாலும் உடலில் குறிப்பிட்ட ஒரு இடத்தில் மாத்திரம் அழுக்கு நிறம்புவதற்கும் பக்டீரியாக்களிள் தொற்று ஏற்படுவதற்கு காரணமான பகுதி தொடர்பில் இந்த பதிவில் பார்க்கலாம்.
எந்த பகுதி தெரியுமா?
உடல் முழுவதும் சுத்தப்படுத்தும் போது நாம் இந்த இடத்தை மட்டும் சரிவர சுத்தம் செய்ய மறந்துவிடுகிறோம். இதன் காரணமாக அந்த பகுதியில் பாக்டீயாக்கள் வளர்ந்து துர்நாற்றத்தை ஏற்படுத்துவதுடன் உடலில் அதிக அழுக்கு நிறைந்த பகுதியாகவும் இது காணப்படுகின்றது.
அது எந்த பகுதி என்றால் வயிற்றின் தொப்புள் பகுதி தான். அறிவியவின் அடிப்படையில் தொப்புள் என்பது ஒரு காயமாகவே பார்க்கப்படுகின்றது. தாயிடம் இருந்து குழந்தை பிரியும் போது ஏற்படும் இயற்கையான காயமாகவே இது குறிப்பிடப்படுகின்றது.
2012 ஆம் ஆண்டு PLOS One இல் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வுக் கட்டுரையின் அடிப்படையில் தொப்புளில் 2,368 வகையான பாக்டீரியாக்கள் வாழ்வதாக ஆய்வு தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த வகையில் உடலில் மிகவும் அழுக்கு நிறைந்த பகுதியாக இது பார்க்கப்படுகின்றது.
இந்த பகுதி குழியாக இருப்பதால் நாம் யாரும் தொப்புளை சுத்தம் செய்வது கிடையாது. மேலும் அதனை சுத்தம் செய்வதற்கு பலருக்கும் ஒரு பயம் இருக்கும். இதனால் இந்த பகுதியில் பாக்டீரியாக்கள் தேங்கி தேங்கி அழுக்காகவும், துர்நாற்றம் உள்ள பகுதியாகவும் காணப்படுகின்றது.
தொப்புளில் அரிப்பு ஏற்பட்டாலோ, சிவந்து காணப்பட்டாலோ அதற்கு அதில் காணப்படும் பக்டீரியாக்கலே காரணம். இந்த பகுதியை சுத்தம் செய்ய வேண்டியது மிகவும் முக்கியமானது என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |