வீட்டில் எவ்வளவு பணம் வைத்திருக்கலாம்? இந்த தொகையை மீறினால் ஆபத்தே
டிஜிட்டர் பரிவர்த்தனைகள் வந்த பின்னர், பணத்தை எடுத்து செலவழிப்பதற்கான தேவையும் குறைந்து விட்டது.
UPI வழியாகவே பெரும்பாலான பரிவர்த்தனைகள் நடக்கிறது, ஆனால் சிலர் அவசர தேவைக்காக பணத்தை வீட்டில் வைத்திருக்கின்றனர்.
இதற்கு ஒரு வரைமுறை உண்டு என்று உங்களுக்கு தெரியுமா? ஒரு குறிப்பிட்ட அளவான தொகையுடன் அதற்கான ஆதாரங்களுடன் வீட்டில் வைத்திருக்கலாம்.
பணம் எங்கிருந்த வந்தது? அதன் வருமான ஆதாரம் என்ன? பெரிய தொகையாக இருந்தால் வருமான வரி செலுத்தியுள்ளீர்களா? என்பது போன்ற பல கேள்விகள் எழுப்பப்படும்.
மீறினால் வரிமான வரித்துறையின் விதிமுறைகளின் படி நடவடிக்கை எடுக்கப்படும், இது பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
பணம் வைத்திருத்தல் தொடர்பில்...
அரசாங்க விதிப்படி, வீட்டில் பணம் இவ்வளவு தான் வைத்திருக்க வேண்டும் என்றெல்லாம்
எந்த ஒரு கட்டாயமும் இல்லை.
ஆனால் நீங்கள் வைத்திருக்கும் பணமானது எங்க இருந்து வந்தது என்றும் எங்கெல்லாம் செலவழித்தீர்கள் என்றுமான கேள்விகளுக்கு விடையாக உங்களிடம் உகந்த ஆதாரம் இருக்க வேண்டும்.
பெரியளவு ரொக்கத்தை நீங்கள் வைத்திருந்தால் அதற்கான வரியை நீங்கள் செலுத்த வேண்டும்.
நீங்கள் செலுத்தக்கூடிய வரிக்கான ஆவணங்களை வைத்திருப்பதினால் வரி தொடர்பாக வருமான வரித்துறை கேட்கும் எந்த ஒரு கேள்விக்கும் உங்களால் பதிலளிக்க முடியும்.
உங்களது வீட்டில் சோதனை நடத்தப்பட்டு அதிக அளவில் பணமானது கண்டறியப்பட்டு, அதற்கு உரிதான தகவல்களை நீங்கள் தெரிவிக்க முடியாவிட்டால் அதற்கான அபராதத்தை செலுத்தும் கட்டாயத்திற்கு தள்ளப்படுவீர்கள்.
உங்களது அபராத தொகையானது 137 % வரையிலான ரெய்டில் கைப்பற்றப்பட்ட தொகையில் இருக்கலாம்.
நீங்கள் வைத்திருக்கும் எந்த ஒரு பணமும் கருப்புப் பணமாகவோ அல்லது கணக்கில் வராத பணமாகவோ இருந்துவிடக்கூடாது.
இந்த வீதிகளின் அடிப்படையில் தான் வீட்டில் பணத்தை வைத்திருக்கவேண்டும்
1. ஒரு நிதியாண்டிற்கு ரூ. 20 லட்சம் மட்டுமே ரொக்கப் பரிவர்த்தனை செய்யலாம் அதற்கு மேல் செய்தால் அபராதம் விதிக்கப்படும்.
2. ஒரே நேரத்தில் 50,000 ரூபாய்க்கு மேல் Deposit செய்தாலோ அல்லது எடுத்தாலோ CBDT படி உங்களது PAN எண்ணை வழங்குவது அவசியமாகும்.
3. PAN மற்றும் ஆதார் தகவல்களுடன் நீங்கள் ஒரு வருடத்திற்கு ரூ. 20 லட்சம் ரொக்கமாக Deposit செய்யலாம், மீறினால் அபராத தொகையாக ரூ.20 லட்சம் வரை விதிக்கப்படும்.
5. எந்த ஒரு பொருளையும் 2 லட்சத்திற்கு மேல் ரொக்கமாக வாங்க முடியாது, தேவைப்படின் PAN மற்றும் ஆதரின் நகலை கொடுக்கவும்.
7. 30 லட்சத்துக்கும் அதிகமான மதிப்புள்ள சொத்துக்களை வாங்குவதும் விற்பதும் விசாரணை அமைப்பின் ரேடாரின் கீழ் வரலாம்.