இந்த அறிகுறிகள் இருக்கா?அப்போ கல்லீரல் முழுமையாக சேதமடைந்துள்ளது உறுதி!
பொதுவாகவே கல்லீரல் பாதிப்படைவதற்கு மதுபானம் மற்றும் புகைத்தல் ஆகியவற்றுடன் மரபியல் கோளாறுகளும் தவறான உணவுப்பழக்கங்களும் கூட காரணமாக அமைகின்றது.
கல்லீரல்
உடலில் காணபப்படும் உறுப்புகளுள் மிகவும் முக்கியமான உறுப்புக்களுள் ஒன்று கல்லீரல். நாம் உண்ணும் உணவின் செரிமானத்திற்கு இந்த உறுப்பு இன்றியமையாதது.
உடலில் இருந்து கழிவுகளை வெளியேற்றுவதிலும் கல்லீரல் முக்கிய இடம் வகிக்கின்றது.கல்லீரல் உடலில் மிகவும் முக்கியமான உறுப்புகளில் ஒன்றாக காணப்படுவதால் கல்லீரல் பாதிப்பின் அறிகுறிகள் குறித்து விழிப்புணர்வுடன் இருக்க வேண்டியது அவசியம்.
அந்தவகையில் கல்லீரல் முழுமையாக சேதமடைந்திருப்பதை உணர்த்தும் பிரதான அறிகுறிகள் தொடர்பில் இந்த பதிவில் பார்க்கலாம்.
பசியின்மை
பசியின்மைக்கு வேறு பல காரணங்கள் இருப்பினும் இதனை அலட்சியமாக எடுத்துக்கொள்வது ஆபத்தை ஏற்படுத்தும். உடலில் உள்ள கழிவுகளை அகற்ற கல்லீரல் உதவுகிறது.கல்லீரலில் ஏதேனும் பிரச்சனை இருந்தாலோ அல்லது சரியாக செயல்படாமல் இருந்தாலோ சரியான நேரத்துக்கு பசி ஏற்படாது. அதனை புறக்கணிப்பது கல்லீரல் செயழிழப்புக்கு வழிகோளும்.
உடல் சோர்வு
ஒருவரது கல்லீரல் சரியாக செயல்படாமலோ அல்லது சேதமடைந்திருந்தாலோ, எப்போதும் சோர்வாக உணர்வீர்கள். உடலுக்கு ஆற்றல் உற்பத்தி உட்பட பல முக்கிய செயல்பாடுகளை கல்லீரல் செய்கிறது. ஆகவே கல்லீரல் பாதிக்கப்பட்டிருந்தால் உடல் அடிக்கடி சோர்வடைவதை உணரக்கூடியதாக இருக்கும்.
வயிற்று வலி
கல்லீரல் வயிற்றின் மேல் வலது பகுதியில் அமைந்துள்ளது. கல்லீரல் சேதமடைந்தால், வயிற்றில் வலி அல்லது வீக்கத்தை உணர முடியும் இது கல்லீரல் பாதிக்கப்பட்டிருப்பதற்கான பிரதான அறிகுறியாக காணப்படுகின்றது.இதனை ஒருபோதும் அலட்சியப்படுத்தவே கூடாது.
மஞ்சள் நிற சருமம் மற்றும் கண்கள்
கல்லீரல் சரியாக செயல்படாத பட்சத்தில் கண்கள் மற்றும் சருமம் மஞ்சள் நிறமாக மாறும். அப்படியானால் இரத்தத்தில் பிலிரூபின் அதிகம் தேங்கியுள்ளது என்பதை அது உணர்த்துகின்றது. இந்த அறிகுறி ஏற்படடால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும் இல்லாவிடில் உயிராபத்து ஏற்படகூடும்.
அடர் நிற சிறுநீர்
கல்லீரல் கடுமையாக சேதமடைந்திருப்பதை உணர்த்தும் இன்னொரு அறிகுறி சிறுநீரின் நிறத்தில் ஏற்படும் மாற்றம். சிறுநீர் அடர் மஞ்சள் நிறத்தில் இருப்பதற்கு பல்வேறு நோய் அறிகுறிகள் காரணமாக இருக்கின்ற போதிலும் கல்லீரல் பாதிப்பின் முக்கிய அறிகுறியாக இது பார்க்கப்படுகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |