இளைஞர்களை தாக்கும் நுரையீரல் புற்று நோய் என்ன காரணம் தெரியுமா?
சமூகத்தில் தற்போது பரவலாக காணப்படும் நுரையீரல் புற்று நோய் எந்த காரணத்தினால் வருகிறது என்பதை இந்த தீவில் பார்கலாம்.
நுரையீரல் புற்றுநோய்
சிகரட் பழக்கம் தற்போது இளம் தலைமுறையினரை பலமாக தாக்கி உள்ளது. காற்று மாசு அதிகமாக இருக்கும் சூழலில், புகைப்பழக்கம் என்பது நுரையீரல் புற்றுநோயை எளிதில் ஏற்படுத்தும்.
இந்த நோய் வருவதற்கு முக்கிய காரணமாக அமைவது புகைப்பிடிக்கும் பழக்கம் தான். புகைப்பழக்கத்தால், அதை செய்பவருக்கு மட்டுமின்றி, அருகில் நிற்பவர்களுக்கும் அதிக ஆபத்து.
இன்னும் சொல்லப் போனால், புகைப்பிடிப்பவரை விட, அருகில் நிற்பவர்களுக்குத் தான் ஆபத்து அதிகம். சிகரெட் பழக்கத்தால் காற்று மாசடைகிறது.
இது கண்ணுக்கு தெரியாமல் பலரையும் பாதிக்கிறது. இவ்வாறு காற்றில் பரவும் சிகரெட் புகையும் பலருக்கு நுரையீரல் புற்றுநோயை உண்டாக்கிறது.
இந்த பழக்கம் தொடர்ந்து 5-10 ஆண்டுகள் வரை இருந்தால் நுரையீரல் தொற்று, நுரையீரல் புற்றுநோய் ஆகியவை ஏற்பட்டதற்கான ஆதாரங்கள் இருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
புகைப்பழக்கத்தை தடுப்பது தனிநபர் பாதகாப்பு மட்டுமல்லாமல் அது சமூகத்திலும் நல்லதொரு ஆரோக்கியத்தை உருவாக்கும்.