50 ஆண்டுகள் அணையாமல் எரியும் நரக வாசல்- எங்குள்ளது தெரியுமா?
இந்த உலகில் வாழும் மக்களுக்கு “நரகம்” பற்றி நம்பிக்கை உள்ளது. பொதுவாக பாவம் செய்தவர்கள் இறந்த பின்னர் நரகத்திற்கு செல்வார்கள் என கூறப்படுகிறது.
ஆனால் பூமியில் தான் நரகத்திற்கான வாசல் உள்ளதாக சில ஆய்வுகள் கூறுகிறது. கிட்டத்தட்ட அரை நூற்றாண்டாக இடைவிடாமல் எரிந்து கொண்டிருக்கும் இந்த தீயை யாராலும் அணைக்க முடியாது என கூறப்படுகிறது.
அணையாத நெருப்பு காரணத்தினால் இந்த இடத்தை “நரகத்தின் வாசல்” என அழைக்கிறார்கள்.
ஆய்வுகளின் படி, நரகத்திற்கும் இந்த இடத்திற்கு எந்தவித தொடர்பும் இல்லை. இடைவிடாத நெருப்பு காரணமாகவே இந்த இடம் நரகத்தின் வாசல் என அழைக்கப்படுகிறது.
அந்த வகையில் சொர்க்கத்தின் வாசலில் எங்குள்ளது? நெருப்பு ஏன் அணையாமல் இருக்கிறது? என்பதனை பதிவில் பார்க்கலாம்.
நரக வாசல் எப்படி உருவானது?
இந்த இடம், தொழில்துறை விபத்தாகத் தொடங்கி தற்போது, அறிவியல் ஆராய்ச்சிக்கான இடமாக மாறியுள்ளது. மனித தவறு மற்றும் இயற்கையின் கணிக்க முடியாத தன்மை மிகப் பெரிய அடையாளமாக பார்க்கப்படுகிறது.
பூமியின் மேற்பரப்பிற்கு அடியில் புதைந்து கிடக்கும் அபாயங்களையும், ஆபத்துக்களையும் வெளிப்படுத்துகிறது. 50 ஆண்டுகளுக்கும் மேலாக இன்னும் எரிந்து கொண்டிருக்கும் நெருப்பு மக்களை அச்சமடைய வைக்கிறது.
வரலாறு
கடந்த 1971 ஆம் ஆண்டு, சோவியத் பொறியாளர்கள் துர்க்மெனிஸ்தானின் பாலைவனத்தில் இயற்கை எரிவாயு எங்குள்ளது என தேடிக்கொண்டிருக்கும் பொழுது அழிவு ஏற்பட்டுள்ளது.
நிலத்தடி எரிவாயு நீர்த்தேக்கத்தை துளைத்து விட்டதால் தரையில் இருந்து சுமார் 230 அடி அகலமும் 100 அடி ஆழமும் கொண்ட ஆழமான பள்ளமாக சரிந்துள்ளது.
மீத்தேன் வாயு உடனடியாக காற்றில் கசிய தொடங்கி, நச்சுப் புகை காற்றுடன் கலந்து தீயாக மாறியுள்ளது.
சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் தவறு
நரகத்தின் வாசல் பார்ப்பதற்கு ஆபத்தாக இருந்தாலும் துர்க்மெனிஸ்தானின் மிகவும் பிரபலமான ஈர்ப்புகளில் ஒன்றாக மாறியுள்ளது ஆண்டுதோறும் சுமார் 10,000 பார்வையாளர்கள் வந்து பார்வையிடுகின்றனர்.
தீப்பிழம்பு நிறைந்த குழி பல மைல்களுக்கு அப்பால் இருந்தும் தெரியும்.
அதிலும் குறிப்பாக இரவில் அது பாலைவனம் முழுவதும் ஒரு பயங்கரமான ஒளியை பரப்பும். கடந்த 2019 ஆம் ஆண்டில் நாட்டின் ஜனாதிபதி பள்ளத்தைச் சுற்றி ஒரு பேரணி காரில் டோனட்ஸ் செய்யும் காட்சி வைரலானது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW