தலைமுடிக்கு வெந்தயத்தைப் பயன்படுத்துவதற்கான சரியான முறை எது?
தலைமுடி வளர்ச்சிக்கு வெந்தயம் சிறந்த பொருள் எனப்படுகின்றது. அதை எப்படி சரியான முறையில் பயன்படுத்தலாம் என்பதை பார்க்கலாம்.

வெந்தயம்
தற்போது இருக்கும் சமூகத்தினருக்கு தலைமுடி உதிர்வு பொடுகு தொல்லை வளர்ச்சியின்மை என பல பிரச்சனைகள் வர தொடங்கி விட்டது.
இதற்கு வெந்தய விதைகளின் மருத்துவ குணங்கள் நிவாரணம் தரும் என்று கூறப்படுகின்றது.
ஊட்டச்சத்துக்கள் நிறைந்த இந்த வெந்தய விதைகளை உங்கள் தலைமுடி பராமரிப்பு வழக்கத்தில் எவ்வாறு சரியான முறையில் பயன்படுத்தலாம் என்பதை பார்க்கலாம்.

பயன்படுத்தும் முறை
முதலில், ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றவும். அதில் வெந்தய விதைகளைச் சேர்க்கவும். வெந்தய விதைகளை இரவு முழுவதும் தண்ணீரில் ஊற வைக்கவும்.
சில நேரங்களில் உங்களுக்கு அதிக நேரம் இல்லையென்றால், வெந்தய விதைகளை சில மணிநேரம் வெதுவெதுப்பான நீரில் ஊற வைக்கலாம்.
வெந்தய விதைகள் மென்மையடைந்தவுடன், அவற்றையும் தண்ணீரையும் ஒரு பிளெண்டரில் சேர்க்கவும்.

வெந்தய விதைகளை நன்கு அரைத்து விழுதாக்கவும். இந்த வெந்தய விதை விழுதை உங்கள் கூந்தல் பராமரிப்பு வழக்கத்தில் ஒரு ஹேர் பேக்காகப் பயன்படுத்தலாம்.
இந்தப் பசையை உங்கள் உச்சந்தலையிலும் முடியிலும் நன்றாகத் தடவவும். சிறந்த பலன்க வேண்டுமென்றால் இந்த ஹேர் பேக்கை சுமார் 30 நிமிடங்கள் அப்படியே விடவும்.

அரை மணி நேரம் கழித்து, உங்கள் தலைமுடியை வெதுவெதுப்பான நீரில் கழுவலாம். வெந்தயத் தலைப்பூச்சுகள் முடி உதிர்வைக் குறைக்கப் பயன்படும்.
வெந்தயத்தில் உள்ள ஊட்டச்சத்துக்கள் முடி வளர்ச்சியை ஊக்குவிப்பதில் திறம்படச் செயல்படும்.
வெந்தயத் தலைப்பூச்சுகள் பொடுகை நீக்கவும் உதவும். இந்தத் தலைப்பூச்சைப் பயன்படுத்தி முடியை மென்மையாகவும், பளபளப்பாகவும், அடர்த்தியாகவும் மாற்றலாம்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |