முகத்தில் இந்த இடத்தில் பரு அடிக்கடி வருதா? அப்போ இந்த ஆரோக்கிய பிரச்சினை இருக்கலாம்
பொதுவாகவே பெண்கள் தங்களுடைய முகத்தை எப்போதும் அழகாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று தான் நினைப்பார்கள்.
முக அழகை பராமரிப்பதற்காக பலரும் பல வழிகளை மேற்கொள்வார்கள். சிலர் இதற்காக மொத்த சம்பளத்தையும் கூட வீணாக்கிவிடுகின்றார்கள்.
அதிலும் முக அழகைக் கெடுக்கும் முகப்பருக்கள் வந்துவிட்டாலே பெண்களுக்கு பெரும் பிரச்சினைதான் இது பெண்கள், ஆண்கள் என இருபாலரும் சந்திக்கும் ஓர் சரும பிரச்சனையாகும்.
முகப்பருக்கள் வருவதற்கு காரணம் சருமத்தில் அதிகப்படியான எண்ணெய் சுரப்பதனாலும், சருமத்துளைகளில் அழுக்குகள் அதிகம் சேர்ந்து இருப்பதாலும் முகத்தில் பருக்கள் ஏற்படுகின்றது.
மேலும் உண்ணும் உணவுகள், மோசமான சரும பராமரிப்பு, ஹார்மோன் மாற்றங்கள் போன்றவையாளும் முகப்பருக்கள் ஏற்படுகின்றது.
அவை மட்டுமே காரணமாக இருக்கும் என பெரும்பாலானவர்கள் நினைக்கின்றார்கள். ஆனால் முகப்பருக்கள் உடலில் காணப்படும் ஆரோக்கிய பிரச்சினைகளை வெளிப்படுத்தும் என்றால் உங்களால் நம்பமுடிகின்றதா?
ஆம் முகப்பரு முகத்தில் எந்த இடத்தில் அதிகம் வருகின்றது என்பதை பொருத்து ஆரோக்கிய பிரச்சினைகளை அடையாளம் காண முடியும் என மருத்துவ நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர். இது குறித்த முழுமையான விளக்கத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.
நெற்றி
நெற்றிப் பகுதியில் அதிகமாக முகப்பரு வருகின்றது என்றால் உங்களின் செரிமான மண்டலத்தில் பிரச்சினைகள் காணப்படுகின்றது என்று அர்த்தம்.
செரிமான பிரச்சனை சரியாவதற்கு அதிக நீர் அருந்துவது நார்ச்சத்து அதிகம் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்வது குறைந்தது 7 மணிநேரமாவது நன்றான தூங்குவது போன்றவற்றில் கவனம் செலுத்த வேண்டும்.
மூக்கு
மூக்கு பகுதியில் முகப்பருக்கள் அதிகமாக வருகின்றது என்றால், இதயம் சார்ந்த பிரச்சினைகள் ஏற்படுவதற்கான அபாயம் அதிகமாக இருக்கின்றது.
எனவே இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தக்கூடிய உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும்.
தாடை
தாடை மற்றும் கழுத்து பகுதியில் முகப்பருக்கள் வந்தால், ஹார்மோன் சமநிலையாக இல்லை என்பதே அதன் அர்த்தம்.
உடலில் ஈஸ்ட்ரோஜெனை விட ஆன்ட்ரோஜென் அதிகமாக இருந்தால் தாடைப் பகுதியில் பருக்கள் அதிகம் தோன்றும். ஹார்மோன் சமநிலை குறித்து மருத்துவ ஆலோசனை பெற்றுக்கொள்வது சிறந்தது.
காது
காது மற்றும் காதுகளை சுற்றியே அதிகம் முகப்பருக்கள் வந்தால் உங்கள் சிறுநீரகம் சரியாக செயற்படவில்லை என்று அர்த்தம். இது குறித்து அதிக கவனம் எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம்.
புருவங்கள்
புருவங்களில் அதிகம் முகப்பருக்கள் வருகின்றது என்றால், கல்லீரல் ஆரோக்கியத்தில் அதிகம் கவனம் செலுத்த வேண்டும். போதியளலு தண்ணீர் மற்றும் கல்லீரலை சுத்தப்படுத்தக்கூடிய உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும்.
கன்னங்கள்
கன்னங்களில் அதிகம் முகப்பருக்கள் வருகின்றது என்றால் நுரையீரல் சம்பந்தப்பட்ட ஆரோக்கிய பிரச்சினைகள் இருப்பதற்கு அதிக வாய்ப்பு காணப்படுகின்றது. அது தொடர்பில் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம்.
Black chickpea curry: கூந்தல் உதிர்வு முதல் ரத்த அழுத்தம் வரை... தீர்வு கொடுக்கும் கருப்பு கொண்டைக் கடலை குழம்பு
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |