Black chickpea curry: கூந்தல் உதிர்வு முதல் ரத்த அழுத்தம் வரை... தீர்வு கொடுக்கும் கருப்பு கொண்டைக் கடலை குழம்பு

Weight Loss Hair Growth Healthy Food Recipes Skin Care Blood Pressure
By Vinoja Feb 04, 2025 04:31 AM GMT
Report

கருப்பு கொண்டைக்கடலையில் அதிகளவான புரோட்டீன் காணப்படுகிறது. இதனால் உடலில் இரத்த சர்க்கரை அளவை குறைப்பதில் பெரும் வங்கு வகிக்கின்றது.

வயதுக்கு மீறிய புத்திசாலித்தனம் கொண்ட ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசி என்ன?

வயதுக்கு மீறிய புத்திசாலித்தனம் கொண்ட ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசி என்ன?

கருப்பு கொண்டைக்கடலையை தினசரி உணவில் சேர்த்துக்கொள்வதால் கூந்தல் ஆரோக்கியத்தை பாதுகாத்து அடர்த்தியான கூந்தல் வளர்ச்சிக்கு உதவுகின்றது.

Black chickpea curry: கூந்தல் உதிர்வு முதல் ரத்த அழுத்தம் வரை... தீர்வு கொடுக்கும் கருப்பு கொண்டைக் கடலை குழம்பு | Black Chana Masala Recipe In Tamil

அதில் காணப்படும் புரோட்டின் செறிவு காரணமாக உடல் எடையை கட்டுக்குள் வைத்துக்கொள்ள வேண்டும் என நினைப்பவர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதமாக பார்க்கப்படுகின்றது.

கருப்பு கொண்டைக்கடலை நாள்பட்ட நோய்களை விரட்டவும் உதவுகிறது. கொண்டைக்கடலையில் இரும்புச் சத்து அதிகமாக இருப்பதால், இரத்தத்தில் உள்ள ஹூமோகுளோபின் அளவை உயர்த்த பெரிதும் உதவுகின்றது.

Black chickpea curry: கூந்தல் உதிர்வு முதல் ரத்த அழுத்தம் வரை... தீர்வு கொடுக்கும் கருப்பு கொண்டைக் கடலை குழம்பு | Black Chana Masala Recipe In Tamil

சரும ஆரோக்கியத்தை பாதுகாப்பதிலும் கொலாஜன் உற்பத்தியை அதிகரிப்பதிலும் ஆற்றலுடன் செயல்ப்படுகின்றது. 

இவ்வளவு மருத்துவ குணங்கள் நிறைந்த கருப்பு கொண்டைக்கடலையில் அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் நாவூரும் சுவையில் அசத்தல் குழம்பு செய்வது எப்படி என இந்த பதிவில் பார்க்கலாம்.

Black chickpea curry: கூந்தல் உதிர்வு முதல் ரத்த அழுத்தம் வரை... தீர்வு கொடுக்கும் கருப்பு கொண்டைக் கடலை குழம்பு | Black Chana Masala Recipe In Tamil

தேவையானப் பொருட்கள்

கருப்பு கொண்டைக்கடலை - 1 கப் 

பெரிய வெங்காயம் - 3

தக்காளி - 3 

இஞ்சி பூண்டு விழுது -2 தே.கரண்டி 

மல்லித்தூள் - 2 தே.கரண்டி

மிளகாய்த்தூள் - 1 தே.கரண்டி

மஞ்சள் தூள் - கால் தே.கரண்டி

சீரகத்தூள் - அரை தே.கரண்டி

கரம் மசாலா தூள் - 1 தே.கரண்டி

மிளகுத்தூள் - அரை தே.கரண்டி

தேங்காய் எண்ணெய் - 5 தே.கரண்டி

உப்பு - தேவையான அளவு

அரைக்க தேவையானவை

Black chickpea curry: கூந்தல் உதிர்வு முதல் ரத்த அழுத்தம் வரை... தீர்வு கொடுக்கும் கருப்பு கொண்டைக் கடலை குழம்பு | Black Chana Masala Recipe In Tamil

தேங்காய் துருவல் - அரை கப் 

முந்திரி பருப்பு - 10

பட்டை - 2 துண்டு 

ஏலக்காய் - 3 

கிராம்பு - 3 

பிரியாணி இலை - 1

சோம்பு - கால் தே.கரண்டி

கொத்தமல்லி - ஒரு கைப்பிடியளவு 

செய்முறை

முதலில் கருப்பு கொண்டைக்கடலையை குறைந்தது 8 மணி நேரம் வரையில் ஊறவைத்துக்கொள்ள வேண்டும்.

Black chickpea curry: கூந்தல் உதிர்வு முதல் ரத்த அழுத்தம் வரை... தீர்வு கொடுக்கும் கருப்பு கொண்டைக் கடலை குழம்பு | Black Chana Masala Recipe In Tamil

பின்னர் ஒரு குக்கரில் கொண்டைக்கடலை மற்றும் உப்பு போட்டு நான்கு விசில் வரும் வலையில் வேக வைத்து இறக்கி குளிரவிட வேண்டும்.

அதனையடுத்து அரைக்கக் தேவையான ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு  சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு பேஸ்டாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு பா்த்திரத்தை அடுப்பில் வைத்து தேங்காய் எண்ணெய் ஊற்றி நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாகும் வரையில் நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.

Black chickpea curry: கூந்தல் உதிர்வு முதல் ரத்த அழுத்தம் வரை... தீர்வு கொடுக்கும் கருப்பு கொண்டைக் கடலை குழம்பு | Black Chana Masala Recipe In Tamil

பின்பு அதனுடன் இஞ்சி பூண்டு விழுதையும் சேர்த்து பச்சை வாசனை போகும் வரையில் வதக்கி,  மல்லித்தூள், மிளகாய்த்தூள் ,மஞ்சள்தூள், சீரகத்தூள் சிறிது உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு பச்சை வாசனை போகும் வரையில் கிளறிவிட்டு வதக்கிக்கொள்ள வேண்டும்.

அதன் பின்பு நறுக்கிய தக்காளி சேர்த்து இரண்டு நிமிடங்கள் வதக்கி, அதில் அரை டம்ளர் தண்ணீர் சேர்த்து பாத்திரத்தை  மூடி அடுப்பை 10 நிமிடங்கள் மிதமான தீயில் வைத்து தக்காளியை நன்கு குழையும் படி விட வேண்டும்.

பின்னர் அதனுடன் வேகவைத்த கொண்டைக்கடலையை அதன் தண்ணீரோடு சேர்த்துக்கொள்ள வேண்டும்.

Black chickpea curry: கூந்தல் உதிர்வு முதல் ரத்த அழுத்தம் வரை... தீர்வு கொடுக்கும் கருப்பு கொண்டைக் கடலை குழம்பு | Black Chana Masala Recipe In Tamil

அதனையடுத்து அரைத்த தேங்காய் விழுது  உப்பு ,கரம் மசாலா தூள் , மிளகுத்தூள் சேர்த்து பாத்திரத்தை மூடி 10 நிமிடங்கள் வரையில் வேகவிட வேண்டும்.

குழம்பு கெட்டியான பதத்திற்கு வந்தவுடன் மல்லித்தழையை தூவி இறக்கினால் அவ்வளவு அசத்தல் சுவையில் ஆரோக்கியம் நிறைந்த கருப்பு கொண்டைக்கடலை குழம்பு தயார்.

Vazhaipoo Biryani: வாழைப்பூவில் பிரியாணியா? ஒரு முறை செய்து பாருங்க

Vazhaipoo Biryani: வாழைப்பூவில் பிரியாணியா? ஒரு முறை செய்து பாருங்க

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW       

மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US