அனைத்து நோய்களுககும் தீர்வு கொடுக்கும் சூப்பர் உணவு இருக்கா? உண்மையை தெரிஞ்சிக்கோங்க
பொதுவாகவே அனைவருக்கும் நோய்கள் இன்றி ஆரோக்கியமாக அதிக நாட்கள் வாழவேண்டும் என்று தான் ஆசை இருக்கும். இந் ஆசையை மூலதனமாக பயன்படுத்தி தான் அனைத்து சந்தைப்படுத்தல் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றது.
பணக்கார்கள் அனைத்து நோய்களையும் தீர்க்கும் சூப்பர் உணவுகளை உண்பதனால் அதிக நாட்கள் வாழ்கின்றார்கள் என்று சுட்டிக்காட்டும் அளவுக்கோ அல்லது இந்த உணவுகளை உண்ணாததால் சீக்கிரம் இறந்துவிட்டார் என குறிப்பிடும் அளவுக்கோ எந்த ஆதாரமும் இல்லை.
உண்மையிலேயே அனைத்து விதமான நோய்களையும் தீர்க்கக் கூடிய சூப்பர் உணவு வகை என்று ஏதாவது இருக்கின்றதா? மக்கள் அனைவரும் ஏதோ ஒரு உணவை அதிகம் நுகர்வதற்கு என்ன காரணம் என்பது குறித்து இந்த பதிவில் தெளிவாக பார்க்கலாம்.
புற்றுநோய் மற்றும் மாரடைப்பு...
பொதுவாகவே மக்கள் மத்தியில் நோய் குறித்த பயம் அடிப்படையாகவே இருக்கின்றது அதிலும் குறிப்பாக புற்றுநோய் மற்றும் மாரடைப்பு போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வு கொடுக்கும் என சந்தையில் எந்த உணவை விற்பனை செய்தாலும் அது பாரிய அளவில் விற்பபையாகும் என்பது உறுதி.
ஆனால் உண்மையில் ஏதோ ஒரு குறிப்பிட்ட உணவில் அப்படி ஒரு பிரம்மாண்ட சக்தி இருக்க வாய்ப்பில்லை என்பதே உண்மை . உதாரணமாக ஒரு பழம் உடலுக்கு தேவையான ஒரு சில வைட்டமின்களை கொண்டிருப்பதனால் அது எல்லா நோய்களுக்கும் தீர்வு கொடுக்கும் என்றோ எவ்வளவு சாப்பிட்டாலும் எந்த பாதக விளைவையும் ஏற்படுத்தாது என்றோ அர்த்தம் கிடையாது.
நாம் அனைவருமே பழங்கள் காய்கறிகள் என அனைத்தையும் தினசரி உணவில் சேர்த்துக்கொண்டு தான் இருக்கின்றோம், இருப்பினும் நோய்களும் வரத்தான் செய்கின்றது. அதற்கு என்ன காரணம்?
அனைத்து உணவுமே நன்மை தரக்கூடியது தான் எந்த உணவையும் அளவுடன் எடுத்துக்கொண்டால் நிச்சயம் நன்மை தரக்கூடியது தான்.
அதற்கான தினசரி ஒரு குறிப்பிட்ட வகை பழங்களையோ அல்லது காய்கறிகளையோ தொடர்ச்சியாக சாப்பிடுவதனால் ஏதாவது பக்க விளைவுகள் ஏற்படக்கூடும்.
எல்லா உணவுகளையுமே சரியான விகிதத்தில் எடுத்துக் கொண்டால் அனைத்து உணவுமே சூப்பர் உணவு தான்.
வெறும் விளம்பரங்களை மாத்திரம் நம்பிக்கொண்டு ஒரு உணவுப் பொருளை நுகர்வதை மக்கள் தவிர்க்கும் வரை சூப்பர் உணவுகள் அவ்வப்போது முளைத்துக்கொண்டுதான் இருக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |