கர்ப்பிணிகள் சாம்பல் சாப்பிடுவது குழந்தைக்கு ஆபத்தா? மருத்துவரின் பரிந்துரை
பொதுவாக சிலர் கர்ப்பமாக இருக்கும் பொழுது சாம்பல் சாப்பிட விரும்புவார்கள்.
இதற்கான காரணம் என்வென்று ஆராயாமல் பேய், பிசாசு என கதைகட்டிக் கொண்டிருப்பார்கள். ஆனால் கர்ப்பமாக இருக்கும் பெண்கள் சாம்பல் மற்றும் இது போன்ற வித்தியாசமாக பொருட்களை சாப்பிடுவதற்கான அறிவியல் காரணங்கள் உள்ளன.
இதன்படி, கர்ப்பிணி பெண்கள் களிமண், சாம்பல், அடுப்புக் கரி, காகிதம், தலைமுடி, கண்ணாடி, சோப்பு, ஐஸ் கட்டிகள் போன்ற ஆரோக்கியமற்ற பொருட்களை சாப்பிடுவார்கள்.
இதனை மருத்துவர்கள் “PICA” என அழைப்பார்கள். இது உணவு கோளாறு நோயின் விளைவாக ஏற்படலாம் என மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள்.
கர்ப்பிணி பெண்களை மட்டும் அல்ல, குழந்தைகளையும் அதிகம் தாக்கும் உணவு கோளாறு நோய் இரத்த சோகை நோயை ஏற்படுத்தும். இதன் காரணமே இப்படியான பொருட்களை சாப்பிடுகிறார்கள்.
அந்த வகையில், இந்த வகை நோயால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கான தீர்வு என்ன என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
உணவு கோளாறு பிரச்சினைக்கான தீர்வு
தினமும் நெல்லிக்காயுடன் 1 துண்டு வெல்லம் சேர்த்து சாப்பிட்டால் என்ன நடக்கும்? அவசியம் தெரிஞ்சிக்கோங்க
1. உணவு கோளாறு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் கர்ப்பக் கால பிரச்சினைகளை தவிர்க்க சில மருத்துவ ஆலோசனைகளை எடுத்து கொள்ளலாம்.
2. களிமண், மண் உள்ளிட்ட ஆரோக்கியமற்ற பொருட்களை சாப்பிட விரும்பும் கர்ப்பிணிகளுக்கு சிவப்பு ராஸ்பெர்ரி இலை தேநீர், கடற்பாசி போன்ற இரும்புச்சத்து நிறைந்த பொருட்களை சாப்பிடக் கொடுக்கலாம்.
3. இன்னும் சிலர் சோப்பு, சலவை பொடிசோப்பு, சலவை பொடி போன்றவற்றை சாப்பிட விரும்புவார்கள். இப்படியான கர்ப்பிணி பெண்களுக்கு உலர் பழங்கள் மற்றும் ஐஸ் கிரீம் போன்றவற்றை சாப்பிடக் கொடுக்கலாம்.
4. சுண்ணாம்பு, சால்க் பவுடர் சுண்ணாம்பு, சால்க் பவுடர், சாம்பல் போன்ற பொருட்களை சாப்பிட விரும்பும் பெண்களுக்கு கால்சியம் மாத்திரைகள், இரும்பு சத்து நிறைந்த பழங்கள் என்பவற்றை சாப்பிடக் கொடுக்கலாம். அதிலும் குறிப்பாக பெர்ரி பழங்கள் கொடுப்பது சிறந்தது.
5. வண்ணப்பூச்சு (Paint) வாசத்தை விரும்பும் பெண்கள், வேதிப்பொருட்கள் நிறைந்த வண்ணப்பூச்சுக்கு பதிலாக சமையலுக்கு பயன்படுத்தும் வண்ணக் கலவைகளை கொடுக்கலாம்.
6. பெண்கள் கர்ப்பமாக இருக்கும் பொழுது அவர்களின் பற்களுக்கு வேலைக் கொடுக்கும் வகையில், வர்க்கி, உலர் வேர்க்கடலை (அலர்ஜி இல்லாத பெண்கள் மட்டும்), உலர் பழங்கள் ஆகியவற்றை சாப்பிடக் கொடுக்க வேண்டும்.
முக்கிய குறிப்பு
உங்கள் வீடுகளில் இருக்கும் கர்ப்பிணிகள் இப்படியான பொருட்களை விரும்பி சாப்பிடுவதை அவதானித்தால் உடனடியாக மருத்துவரிடம் அழைத்து செல்லுங்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |