அந்த பழக்கங்கள் உங்களிடம் இருக்கா? அப்போ வெற்றி கிட்ட கூட வராதாம்... எச்சரிக்கும் சாணக்கியர்
சாணக்கிய நீதிக்கு தொன்று தொட்டு இன்றளவும் மவுசு குறையவே இல்லை. இந்த நீதி நூலில் மனித வாழ்க்கையில் நாம் நிச்சயம் கடக்க வேண்டிய கட்டங்கள் தொடர்பில் முழுமையான மற்றும் தெளிவான விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.
பண்டைய இந்தியாவின் புகழ்பெற்ற அறிஞராகவும் சிறந்த ராஜதந்திரியாகவும், ஒரு தலைசிறந்த பொருளாதார நிபுணராக திகழ்ந்தவர் தான் ஆச்சார்யா சாணக்கியர்.
மனித வாழ்க்கையின் அனைத்து அம்சங்களையும் பற்றியும் ஆழ்ந்த அறிவையும் ஞானத்தையும் கொண்டிருந்தமையால் இவரின் கருத்துக்கள் உலகளாவிய ரீதியில் பிரபல்யம் அடைந்தது.
சாணக்கிய நீதியை பின்பற்றி வாழ்வில் வெற்றியடைந்தவர்கள் ஏராளம் பேர் இருக்கின்றார்கள். அந்த வகையில் சாணக்கியரின் கருத்துப்படி குறிப்பிட்ட பழக்கங்கள் வாழ்வில் பாதகமாக சூழ்நிலைகளை உருவாக்கிவிடும் என்று இந்த பழக்ககள் வெற்றி தடுக்கும் என்றும் சாணக்கியர் எச்சரித்துள்ளார்.
அப்படி வாழ்வில் வெற்றியையும் மகிழ்ச்சியையும் அனுபவிப்பதற்கு தடையாக இருக்கும் பழக்கங்கள் என்னென்ன என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
பொறாமை
சாணக்கிய நீதியின் பிரகாரம் மற்றவர்களின் மகிழ்ச்சியைப் பார்த்து பொறாமைபடும் குணம் இருந்ப்பவர்கள் வாழ்வில் ஒருபோதும் மகிழ்ச்சியடையவே முடியாது.
இப்படிப்பட்ட குணம் இருந்தால் தங்கள் வாழ்நாள் முழுவதும் நண்பர்களின்றி தனியாக இருப்பார்கள், மற்றவர்களின் வெற்றியைப் பார்த்து துன்பப்படும் குணம் கொண்டவர்களின் வாழ்வில் வெற்றி என்ற நாமமே இருக்காது என சாணக்கியர் எச்சரிக்கின்றார்.
பொறாமை தன்னை தானே அழித்துவிடும் ஆற்றல் படைத்தது. பொறாமைப்படும் குணம் மகிழ்சியை முற்றாக அழித்துவிடும்.
கட்டுப்பாடில்லாத மனம்
சாணக்கியர் கூற்றின் அடிப்படையில் ஒருவருக்கு தன் ஆசைகளையும் எண்ணங்களையும் கட்டுப்படுத்த முடியாம போது பல்வேறு இன்னல்களுக்கு முகம் கொடுக்க வேண்டி ஏற்படும்.
மனதை அடக்கியாள தெரியாதவர்கள் வாழ்வில் வெற்றியின் சுவையை அனுபவிக்கவே முடியாது என்கின்றார் சாணக்கியர்.
மனம் கட்டுப்பாட்டில் இல்லாத போது இலக்கை நோக்கி சிந்திப்பதும், இலக்கை அடைய போராடுவதும் சாத்தியமற்றது.
ஒழுக்கமின்மை
சாணக்கியரின் கருத்துப்படி ஒருவரிடம் சிறந்த ஒழுக்கம் மற்றும் நல்ல குணங்களும் இல்லை என்றால், அவர்களால் எந்த நல்ல விடயத்தையும் செய்யவே முடியாது.
இப்படிப்பட்டவர்கள் எந்த தொழிலிலும் நீண்ட நாட்கள் நிலைத்திருக்க முடியாது. இவர்கள் வெற்றியை குறுக்கு வழியில் பெற முயச்சிப்பார்கள் ஆனால் அது நீடிக்காது. மேலும் அழிக்க முடியாத அவமானத்தை தேடிக்கொடுக்கும்.
ஒழுக்கம் இல்லை என்றால் அவர்கள் எவ்வளவு போராடினாலும் வெற்றியடைய முடியாது என சாணக்கியர் எச்சரித்துள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |