குருப்பெயர்ச்சிக்கு உண்மையான அர்த்தம் என்ன? அறிவியல் இரகசியத்தின் உண்மை
பலரும் குருப்பெயர்ச்சி பற்றி பல விதமான உண்மைகள் பற்றி கூறுகின்றனர். இதன் பின்னணியில் உள்ள உண்மை மற்றும் அறிவியல் கலந்த சோதிட விளக்கம் பலருக்கும் தெரியாது.

குருப்பெயர்ச்சி
"பெயர்ச்சி" என்றால் இடப் பெயர்ச்சி என்று பொருள். தற்போது குருப்பெயர்ச்சி என்று ஜோதிடத்தில் ராசி பலன் கருதப்படுகின்து. இது வியாளக்கோளின் இடப்பெயர்ச்சி ஆகும்.
ஒரு ராசி மண்டலத்திலிருந்து இன்னொரு ராசி மண்டலத்திற்கு இடம் பெயர்வதையே நாம் 'குருப் பெயர்ச்சி' என்று அழைக்கிறோம்.
இங்கு ராசி மண்டலம் என்பது விண்மீன்களின் கூட்டமாகும். வானில் உள்ள சில விண்மீன்களைக் கோடிட்டு இணைத்தால் அவை சில குறிப்பிட்ட வடிவங்களில் தோன்றும்.

அந்த வடிவங்களை வைத்தே நம் முன்னோர்கள் சிம்மம், மீனம், கும்பம், தனுசு போன்ற பன்னிரண்டு ராசி மண்டலங்களாக அவற்றுக்குப் பெயரிட்டனர்.
பூமிப் பரப்பிலிருந்து நாம் வானத்தைப் பார்க்கும்போது, வியாழன் கோள் ஒரு நட்சத்திரக் கூட்டத்திலிருந்து இன்னொன்றுக்கு நகர்வது போலத் தோன்றுவதால் இது குருப் பெயர்ச்சி எனப்படுகிறது. இதுவே இதன் அறியல் காரணமாகும்.

அறிவியல்
சந்திரன் பூமியை சுற்றி வருகிறது பூமியும் சந்திரனை சுற்றி வருகிறது. விண்வெளியில் பல நட்சத்திரங்கள் இருக்கிறது.
ஒட்டுமொத்தமாக நமது பிரபஞ்சத்தில் உள்ள நட்சத்திரங்களின் எண்ணிக்கை தோராயமாக பத்தாயிரம் கோடியையும் பத்தாயிரம் கோடியையும் பெருக்கினால் வரும் தொகை ஆகும்.
நியூட்டனின் ஈர்ப்பு விதிப்படி, ஒவ்வொரு நிறையும் (Mass) அடுத்த நிறையைத் தன் பால் கவர்ந்திழுக்கிறது. அதேபோல், பூமிக்கும் பிற கோள்களுக்கும் இடையே உள்ள ஈர்ப்பு விசையின் தாக்கம் பூமியில் உள்ள உயிரினங்கள் மீது நேரடியாகப் பாய்கிறது.

மக்கள் இந்த விண்வெளியில் உள்ள கோள்களை மக்கள் ஆதிகாலத்தில் சூரியன், சந்திரன் மற்றும் வியாழன் (குரு), புதன், வெள்ளி (சுக்கிரன்), செவ்வாய் என்று பெயரிட்டார்கள்.
கோள்களின் ஈர்ப்பு விசை மனிதர்களின் இரத்த ஓட்டத்திலும், எண்ணங்களிலும், குணங்களிலும் மாற்றங்களை உருவாக்கும் எனவும் நம்பினார்கள்.
இப்படி கோள்களின் இடமாற்றத்தை வைத்தும் பல ஜோதிட நம்பிக்கைகள் உருவானது.
அறிவியலின் படி ஒவ்வொரு கோள்கள் மாறும் போதும் அதன் கதிர்கள் மற்றும் பூமிக்கு வரும் அவற்றின் தாக்கம் ஒவ்வொரு மனிதர்களுக்கும் வித்தியாசமான தாக்கத்தை கொடுக்கும். இதை வைத்து தான் ஜோதிடர்கள் ராசிபலன்கள் என்று கணிக்கின்றனர்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |