இன்டர்மிட்டண்ட் டயட் செய்தால் என்ன நடக்கும் தெரியுமா? தெரிஞ்சிக்கோங்க!
பொதுவாக “இன்டர்மிட்டண்ட் டயட் ” எனப்படுவது ஒரே நாளில் விரதம், உணவு சாப்பிடுவது இரண்டையும் மாறி மாறி பின்பற்றும் ஒரு முறையாகும்.
இது போன்ற நாட்களில் உங்களுக்கு விருப்பமான எல்லா வகையான உணவுகளையும் எடுத்து கொள்ளலாம்.
இவ்வாறு சாப்பிடும் பொழுது அன்றாட வாழ்க்கைக்கு தேவையான கலோரிகள் உரிய முறையில் கிடைக்கும்.
மாறாக இந்த முறையில் டயட் பின்பற்றும் பொழுது ஆரோக்கியம் நிறைந்த உணவுகளை எடுத்து கொள்ள வேண்டும்.
அந்த வகையில் இது போன்று இன்டர்மிட்டண்ட் டயட்டில் இருக்கும் சுவாரஸ்யமான விடயங்களை தொடர்ந்து பார்க்கலாம்.
இன்டர்மிட்டண்ட் டயட்டினால் ஏற்படும் விளைவுகள்
இன்டர்மிட்டண்ட் டயட்டில் இருப்பவர்கள் சரியான நேரத்திற்கு சாப்பிட வேண்டும். அதாவது இது போன்ற நேரங்களில் சரியாக 8-12 மணி நேரம் சாப்பிடாமல் இருக்க வேண்டும்.
இந்த நேரத்தை சரியாக பின்பற்ற தவறும் பட்சத்தில் ஏகப்பட்ட பின்விளைவுகளை சந்திக்க வேண்டி இருக்கும்.
அத்துடன் இது போன்ற டயட் இருப்பவர்கள் திடீரென மாற்றத்தை கொண்டு வர முடியாது. மாறாக உடல் பழக்கமாகும் வரை பொறுமை காப்பது அவசியம்.
புதிதாக டயட்டுக்குள் வர நினைப்பவர்கள் முதல் வாரத்தில் 12 -12 மணி நேர் என்று தொடங்கி அப்படியே படிப்படியாக அதை 16-௮ விண்டோவுக்குள் நுழைய முயற்சி செய்வது அவசியமாகும்.
டயட்டின் போது தலைசுற்றல், மயக்கம், உடல் சோர்வு, அதிகப்படியான பசி ஆகிய பிரச்சினைகள் இருந்தால் மருத்துவ ஆலோசனைக்கு பின்னர் இதனை பின் தொடரலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |