Chanakya: இந்த குணமுள்ள பெண்கள் ஆண்களுக்கு கிடைக்கும் பொக்கிஷம்... உங்களிடம் இருக்கா?
முன்னைய காலத்தில் இந்தியாவின் புகழ்பெற்ற அறிஞராகவும் சிறந்த ராஜதந்திரியாகவும், ஒரு தலைசிறந்த பொருளாதார நிபுணராக திகழ்ந்தவர் தான் ஆச்சார்யா சாணக்கியர்.
மனித வாழ்க்கையின் அனைத்து அம்சங்களையும் பற்றியும் ஆழ்ந்த அறிவையும் ஞானத்தைக் கொண்டிருந்தமையால் இவரின் கருத்துக்கள் பிற்காலத்தில் உலகளவில் புகழ் பெற்றது.
இன்றும் உலகளாவிய ரீதியில் பல நாடுகளிலும் சாணக்கிய நீதியை பின்பற்றுபவர்கள் ஏராளமாக இருக்கின்றனர். அந்தவகையில் சாணக்கிய நீதியில் இருந்து திரட்டப்பட்ட தகவல்களின் பிரகாரம் குறிப்பிட்ட சில குணங்களை கொண்ட பெண்களை திருமணம் செய்துக்கொண்ட ஆண்களின் வாழ்வில் அதிர்ஷ்டத்துக்கு பஞ்சமே இருக்காது என்கின்றார்.
அப்படி ஆண்களின் திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கும் பெண்களிடம் இருக்க வேண்டிய முக்கிய குணங்கள் என்னென்ன என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
அமைதியான பெண்கள்
சாணக்கிய நீதியின் பிரகாரம் அமைதியாக குணம் கொண்ட பெண்கள் லட்சுமி தேவியின் மறு வடிவமாக பார்க்கப்படுகின்றார்கள். அத்தகைய இயல்பு கொண்ட பெண்களை திருமணம் செய்துக்கொள்ளும் ஆண்களுக்கு மிகப்பெரிய அதிர்ஷ்டம் கிடைக்கும்.
இந்த குணம் கொண்ட பெண்கள் இருக்கும் வீட்டில் எந்த விதமான பிரச்சினைகளுக்கும் இடமே இருக்காது.இவர்கள் வீட்டை அழகுபடுத்தி குடும்பத்தில் நல்லிணக்கத்தையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்துவார்கள். அதனால் குடும்பத்தில் வேகமான வளர்ச்சியை காண முடியும். வீட்டிலும் எப்போதும் நேர்மறை ஆற்றல்கள் நிறைந்து காணப்படும்.
கல்விகற்ற பெண்கள்
சாணக்கிய நீதியின் அடிப்படையில் கல்வியில் சிறந்த பெண்களை திருமணம் செய்துக்கொள்ளும் ஆண்கள் வாழ்வில் வெகுவிரையில் முன்னேற்றம் அடைவார்கள் என குறிப்பிடப்படுகின்றது.
இத்தகைய பெண்கள் பயமின்றி முடிவுகளை எடுப்பார்கள். அதனால் கணவனுபக்கு சிக்கல்கள் ஏற்படுகின்ற போது இவர்கள் பக்கபலமாக இருந்து உதவிசெய்வார்கள். இப்படிப்பட்ட பெண்கள் கிடைப்பது வரம் என குறிப்பிடுகின்றார் சாணக்கியர்.
இனிமையாக பேசும் பெண்கள்
சாணக்கிய நீதியின் பிரகாரம், மென்மையாகவும் இனிமையாகவும் பேசும் பெண்களை திருமணம் செய்துக்கொள்ளும் ஆண்கள் வாழ்க்கை முழுவதும் மகிழ்ச்சியாக இருப்பார்கள். இவர்கள் வீ்ட்டில் இருக்கும் அனைவரினதும் மனதை புன்படுத்தாமல் புரிந்து நடந்துக்கொள்வார்கள். இந்த குணம் கொண்ட பெண் மனைவியாக அமைந்தால் வாழ்க்கை செழிப்பாக இருக்கும்.
சூழ்நிலைக்கு புரிந்து நடக்கும் பெண்கள்
சாணக்கியரின் கருத்துப்படி , குடும்பத்தின் சூழ்நிலையை புரிந்து நடந்துக்கொள்ளும் பெண்கள் ஆண்களுக்கு கிடைக்கும் பொக்கிஷமாகும். இந்த குணம் இருக்கும் பெண்கள் எத்தகைய கடினமாக சூழ்நிலையையும் கையாளும் திறமை கொண்டவர்களாக இருப்பார்கள்.
சகிப்புத்தன்மை கொண்ட பெண்கள்
சாணக்கிய நீதியில் குறிப்பிடப்பட்டுள்ளதன் அடிப்படையில் சகிப்புத்தன்மை கொண்ட பெண்கள் வாழ்க்கை துணையாக அமைந்தால் இந்த ஆணின் வாழ்க்கை மிகவும் அமைதி நிறைந்ததாகவும் முன்னேற்றங்கள் நிறைந்ததாகவும் இருக்கும்.
அத்தகைய மனைவியின் ஆதரவு பக்கபலமாக இருக்கும் பட்சத்தில் அந்த கணவன் எந்த கடினமான சூழலையும் எளிதாக சமாளித்துவிட முடியும்.
பணத்தை சேமிக்கும் பெண்கள்
சாணக்கிய நீதியின்படி, ஒரு பெண்ணிடம் பணத்தை சேமிக்கும் குணம் இருந்தால் அவள் இந்த குடும்த்துக்கே கிடைத்த வரம் என்கின்றார். இந்த குணம் கொண்ட பெண்ணை திருமணம் செய்யும் ஆண் தொழில் ரீதியில் அசுர வளர்ச்சியை காண்பார். இவர்கள் வாழ்வில் வெற்றிகள் குவியயும். மேலும் கடினமான சூழ்நிலையிலும் கூட அந்த பெண்ணின் சேமிப்பு கைகொடுக்கும்.
chanakya topic: தவறியும் இப்படிப்பட்ட இடங்களில் வசிக்காதீங்க... சாணக்கிய நீதியில் திரட்டப்பட்ட தகவல்
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |