chanakya topic: தவறியும் இப்படிப்பட்ட இடங்களில் வசிக்காதீங்க... சாணக்கிய நீதியில் திரட்டப்பட்ட தகவல்
பண்டைய காலத்தில் இந்தியாவின் புகழ்பெற்ற அறிஞர், ஒரு சிறந்த இராஜதந்திரி மற்றும் ஒரு தலைசிறந்த பொருளாதார நிபுணராக திகழ்ந்து உலகம் முழுவதும் பிரபல்யம் அடைந்தவர் தான் ஆச்சாரிர் சாணக்கியர்.
இவரின் கொள்கைகளுக்கு உலகம் முழுவதிலும் இன்றளவும் மவுசு குறையவே இல்லை. இவர் தனது வாழ்க்கையில் கடைப்பிடித்த பல்வேறு விடயங்கள் மற்றும் வாழ்க்கையில் சந்தித்த சவால்கள் மற்றும் அனுபவங்களின் தொகுப்பே சாணக்கிய நீதியின்
சாணக்கிய நீதியை பின்பற்றியவர்கள் இன்றும் பின்பற்றுபவர்கள் என ஏறாளம் போர் இருக்கின்றனர். வாழ்வில் வெற்றியடைந்த பலபேருக்கு இது ஒரு சிறந்த வழிக்காட்டியாக இருந்துள்ளது என்றால் மிகையாகாது.
அந்தவகையில் சாணக்கிய நீதியில் இருந்து திரட்டப்பட்ட தகவல்களின் பிரகாரம் குறிப்பிட்ட சில இடங்களில் வசிப்பதன் மூலம் வாழ்க்கையில் எந்தவிதமான முன்னேற்றத்தையும் அடைய முடியாது என சாணக்கியர் குறிப்பிடுகின்றார். அப்படிப்பட்ட இடங்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலலாம்.
பணக்காரர்கள் இல்லாத இடம்
சாணக்கிய நீதியின் அடிப்படையில் நம்மை விட வசதியானவர்கள் இருக்கும் இடத்தில் வசிக்கும் போது இயல்பாகவே நமது நிலையும் முன்னேறும் இதுவே வசதி குறைந்தவர்கள் இருக்கும் இடத்தில் வசித்தால் நமது வாழ்க்கை எப்போதும் முன்னேற்ற பாதையில் செல்லபோவதில்லை என சாணக்கியர் எச்சரிக்கின்றார்.
கல்வி நிறுவனங்கள் இல்லாத இடம்
சாணக்கிய நீதியின் பிரகாரம் கல்வி நிறுவனங்கள் இல்லதாத இடங்களில் வசிப்பது நமது ஆளுமையிலும் எதிர்கால வாழ்க்கையிலும் பாரிய பின்னடைவை ஏற்படுத்தும்.
பல்வேறு விடயங்களை கற்பதன் மூலமே மனிதன் முழுமையடைகின்றான் இதற்கான வாய்ப்பு இல்லாத இடத்தில் நீங்கள் வசிக்கின்றீர்கள் என்றார், இந்த இடத்தில் இருந்து வெளியேற முயற்சி செய்வது மட்டுமே வாழ்வில் முன்னேற்றத்தை கொடுக்கும் என சாணக்கிய நீதியில் குறிப்பிடப்படுகின்றது.
உறவுகள் இல்லாத இடம்
வீட்டிற்கு அருகில் சகோதரர்கள், உறவினர்கள், நண்பர்கள் அல்லது சமூக மக்கள் என யாரும் இல்லாத இடத்தில் வசிப்பது வாழ்வில் பல பிரச்சினைகளுக்கு காரணமாக இருக்கும் என்கின்றார் சாணக்கியர்.
உறவினர்கள் அருகில் இருந்தால் சண்டை சச்சரவுகள் வந்தாலும் கூட அவசர நிலைகளின் போது உதவியாக இருப்பார்கள். உறவினர்கள் யாரும் இல்லாத இடத்தில் இருப்பது வாழ்வில் நல்ல முன்னேற்றங்களை தடுப்பதுடன் பாதுகாப்பற்ற சூழலையும் ஏற்படுத்துகின்றது.
மரியாதை மற்றும் கௌரவம் இல்லாத இடம்
நீங்கள் வசிக்கும் இடத்தில் உங்களுக்கு நல்ல மதிப்பும் மரியாதையும் இருக்க வேண்டியது முக்கியம். மரியாதை கொடுக்காத இடத்தில் இருப்பதால் எந்த பலனும் இருக்கப்போவது இல்லை.
அதனால் உங்கள் வாழ்க்கை நிச்சயம் முன்னேற்ற பாதையில் செல்லாது எனவே ஒரு இடத்தில் நமக்கான அங்கிகாரம் கிடைக்கவில்லை என்றால் அந்த இடத்தில் இருந்து உடனடியாக வெளியேற வேண்டும் என சாணக்கிய நீதி குறிப்பிடுகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |