தினமும் ஒரு கிளாஸ் பீட்ரூட் ஜூஸ் - உடலில் நடக்கும் அற்புத மாற்றங்கள் என்னென்ன?
பொதுவாகவே சூப்பர் உணவுகள் பட்டியலில் பீட்ரூட் முக்கிய பங்கு வகிக்கின்றது. அதற்கு முக்கிய காரணம் அதில் இருக்கும் மருத்துவ குணங்களும், ஊட்டச்சத்துக்களும் தான்.
பீட்ரூட்டில் இரும்புச்சத்து, ஃபோலேட், வைட்டமின் 12 போன்ற இரத்தணுக்களின் உற்பத்திற்கு வேண்டிய சத்துக்கள் வளமாக இருப்பதுடன் சரும ஆரோக்கியத்தை பாதுகாக்க உதவும் சேர்மானங்களும் செரிந்து காணப்படுகின்றது.

உடலில் இரத்தணுக்களின் அளவு சீராக இருக்க நினைத்தால், பீட்ரூட் ஜூஸை தினசரி எடுத்துக்கொள்வது ஒரு சிறந்த தேர்வாக இருக்கும். இப்படி பீட்ரூட் ஜுஸ் குடிப்பதால் உடலில் நடக்கும் மாயாஜாலம் குறித்து விரிவாக இந்த பதிவில் பார்க்கலாம்.
ஆரோக்கிய நன்மைகள்
தினசரி பீட்ரூட் ஜூஸ் எடுத்துக்கொள்வதால், நம் உடலில் இருந்து நைட்ரிக் ஆக்சைடு, ரத்த நாளங்களை நன்கு விரிவடைய செய்து, தேவையான ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். உயர் ரத்த அழுத்த பிரச்சினை இருப்பவர்கள் தினசரி ஒரு ட்ம்ளர் பீட்ரூட் ஜூஸ் குடித்து வர ஆரோக்கியம் மேம்படும்.

பீட்ரூட் ஜூஸைக் குடித்து வந்தால், கல்லீரலில் உள்ள பாதிக்கப்பட்ட செல்கள் புதுப்பிக்கப்படும். ரத்த அழுத்தம் அதிகமாக இருந்தாலும், ஆண்மை குறைவு ஏற்பட வாய்ப்புள்ளது. பீட்ரூட் ஜூஸ் ஆண்மை குறைப்பாட்டுக்கும் தீர்வு கொடுக்கும்.
பீட்ரூட் ரத்தத்தை அதிக அளவில் உற்பத்தி செய்யவும் ஈமோகுளோபின் அளவை அதிகரிப்பதிலும் பெரும் பங்கு வகிக்கின்றது. குறிப்பாக பீட்ரூட்டில் லைகோபீன் மற்றும் ஸ்குவாலேன் உள்ளிட்ட சருமத்திற்கு மிகவும் நன்மை பயக்கும் கலவைகள் உள்ளதால், இது சரும பராமரிப்பில் பெரும் பங்கு வகிக்கின்றது.

அதில் காணப்படும் விசேட வேதியல் கலவைகள் ஆன்டி-ஏஜிங் விளைவுகளை கொண்டிருப்பதோடு, முக சருமத்தில் ஏற்படும் சுருக்கங்களை குறைப்பதிலும் ஆற்றல் காட்டுகின்றது.
எனவே நீண்ட காலத்துக்கு சருமத்தை பளபளப்பாகவும், பொலிவாகவும் வைத்திருக்க விரும்புவோர் தினசரி ஒரு கிளாஸ் பீட்ரூட் ஜூஸ் குடிப்பதை வழக்கமாக்கிக்கொள்வதால் சரும பராமரிப்பு எளிதாகிடும். இயற்கை முறையில் சருமத்தை வெண்மையாக்கவும் இது துணைப்புரியும்.

இதய நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நைட்ரிக் ஆக்சைட்டின் அளவு குறைவாக இருக்கும். பீட்ரூட்டில் நைட்ரேட் அதிகம் உள்ளதால் இது அவர்களுக்குப் பெரிய அளவில் உதவுகிறது.
குறிப்பு - பீட் ஜூஸ் தினமும் எடுத்துக் கொள்ளும் போது, சர்க்கரை நோய் உள்ளவர்கள், சுகர் அளவை அடிக்கடி பரிசோதித்து பார்ப்பது முக்கியம்.பீட்ரூட்டில் இயற்கையாகவே சர்க்கரை மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் நிறைந்துள்ளன. எனவே, இதை தொடர்ந்து உட்கொள்ளும்போது ரத்தத்தில் சர்க்கரையின் அளவு திடீரென அதிகரிக்க வாய்ப்புள்ளது
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |