மது குடிப்பதை நிறுத்திய 30 நாட்களில் உடலில் உண்டாகும் மாற்றங்கள் என்னென்ன?
பொதுவாகவே மது அருந்துவது உடல் ஆரோக்கியத்தில் பாரிய பாதக தாக்கங்களை ஏற்படுத்தும் என்பது அனைவரும் அறிந்ததே.
எப்போதாவது மது அருந்தினாலும் சரி, அன்றாடம் மது அருந்தினாலும் சரி அது உடலின் முக்கிய பாகங்களை மோசமாக பாதிக்கும் என மருத்துவர்களும் எச்சரிக்கின்றனர்.
இது குறித்து அறிந்திருந்தும் பெரும்பாலானவர்கள் மது அருந்தும் பழக்கத்தை கொண்டிருக்கின்றார்கள்.
அப்படி மதுவால் ஏற்படக்கூடிய உடல் மற்றும் மனரீதியான விளைவுகள், மதுக் குடிப்பதை வெறும் ஒரு மாதத்திற்கு நிறுத்தினால் உடலில் ஏற்படக்கூடிய அற்புதமான மாற்றங்கள் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
ஆரோக்கியமான மாற்றங்கள்
அதிகமாக குடிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு கல்லீரல் ஈரல் அழற்சி ஏற்படும் வாய்ப்பு அதிகமாக காணப்படுகின்றது. இது ஒரு நாளில் உண்டாகாது.
ஆனால் அதிகமாக குடிப்பவருக்கு ஆண்களுக்கு ஒரு நாளைக்கு இரண்டுக்கு மேல், பெண்கள் ஒரு நாளைக்கு ஒரு முறை, கல்லீரலில் கொழுப்பு மாற்றங்கள் ஏற்படுகின்றது.
எனவே குடிப்பதை நிறுத்தும் பட்சத்தில் அந்த மாற்றங்கள் மீளக்கூடியவை மற்றும் கல்லீரல் இயல்பு நிலைக்கு மாறும்.
வெறும் ஒரு மாத காலத்துக்கு மது அருந்துவதை தவிர்ப்பதன் காணரணமாக முடிவெடிக்கும் விஷயங்களில் தெளிவாக செயற்பட முடியும்.
தூக்கம் சீராகும், சுறுசுறுப்பாக இயங்கக்கூடியதாக இருக்கும், மூன்று வேளை உணவுவை சரியாக முறையில் சாப்பிட கூடிய நிலை காணப்படும்.
அதிகமாக குடிக்கும் போது வேறு நொதியால் வளர்சிதை மாற்றம் உண்டாகும் போது இது வேறுபட்ட பாதையால் வளர்சிதை மாற்றப்படும் போது அது கெட்ட கொழுப்பை(எல்டி எல்) ஆக்ஸிஜனேற்றம் செய்யும் ஏராளமான ஃப்ரீ ரேடிக்கல்களை உருவாக்குகிறது.
மேலும் எல்டிஎல் ஆக்ஸிஜனேற்றப்படும் போது அது கரோடிட் தமனிகளில் படிந்து இதய நோய் அபாயத்தை அதிகரிக்கின்றது. ஒரு மாதத்துக்கு குடிப்பழக்கத்தை நிறுத்துவதனால் இந்த பிரச்சினைகளில் இருந்து விடுபட வாய்ப்பு கிடைக்கின்றது.
மதுப்பழக்கம் மனிதனின் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தூண்டுகின்றது. ஆய்வுகளின் அடிப்படையில் 3.5 சதவீதம் புற்றுநோய் இறப்புக்கான காரணம் மதுப்பழக்கம் தான் என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.
குறிப்பாக கல்லீரல் புற்றுநோய், கணைய புற்றுநோய், மார்பகப் புற்றுநோய், தலை மற்றும் கழுத்து புற்றுநோய் ஏற்படுவதற்கு மது பழக்கமே காரணமாக இருக்கின்றது. மது அருந்துவதை நிறுத்தினால் புற்றுநோய் அபாயத்திலிருந்து விடுப்படலாம்.
எல்லா வகையான மதுவும் அதிக கலோரிகளை கொண்டுள்ளது. இதனால் வெகுவாக உடல் எடையை அதிகப்படுத்திவிடுகின்றது.
எனவே இதனை நிறுத்துவது உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ளவும், தொப்பையை குறைக்கவும் பெரிதும் துணைப்புரிகின்றது.
அதிக மதுப்பழக்கம் மூளை செயல்பாடுகளில் தாக்கத்தை ஏற்படுத்துவதுடன் நினைவாற்றலையும் குறைத்துவிடுகின்றது.
மதுப்பழக்கம் கொண்ட பலர் குறிப்பிட்ட மூளை பாதிப்புக்கு ஆளாகி மூளை சிதைவு, மூளை செயல்பாடுகளில் தொய்வு போன்ற பிரச்சனைகளை அதிகம் சந்திக்கின்றனர்.
மது அருத்துவதை நிறுத்துவதன் மூலம் உடல் ஆரோக்கியத்துக்கு தீங்கு விளைவிக்கும் இத்தகைய அனைத்து பிரச்சினைகளில் இருந்தும் விடுபடலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |