நாம் உறங்கும்போது இவ்வளவு விடயங்கள் நடக்கிறதா?
தூக்கம் என்பது அனைவருக்கும் இன்றியமையாத ஒன்றாகக் காணப்படுகிறது. ஓடி ஓடி உழைத்த உடல் சற்று அமைதியாக ஓய்வெடுக்கும் நேரம் அது.
தூக்கம் என்பது உடலிலுள்ள உறுப்புக்களும் திசுக்களுக்கும் புத்துணர்ச்சி அடையும் நேரம் அது.
சரி இனி தூக்கம் எப்படி வருகிறது என்று பார்ப்போம்...
நமது மூளைப் பகுதியில் உறக்க மையம் என்ற ஒன்று உள்ளது. இந்த உறக்க மையத்தை நமது குருதியிலுள்ள கல்சியம் கட்டுப்படுத்துகிறது.
image - sleep foundation
உறக்க மையத்தில் தேவையான அளவு கல்சியம் சேர்ந்தவுடன் உறக்கம் வருகின்றது. இருப்பினும் இந்த உறக்க மையத்தில் கல்சியத்தை செலுத்தினால் உறக்கம் வருமா என்று கேட்டால், உறக்கம் வரும் என்கிறார்கள் மருத்துவர்கள்.
இருப்பினும் அதை சரியாக உறக்க மையத்தில் செலுத்தாவிட்டால் உறக்கம் வராது.
உறக்கத்தின்போது என்ன நடக்கிறது?
நாம் தூங்கும்போது உறக்க மையமானது இரண்டு விதமாகத் தொழிற்படுகிறது. முதலாவதான இதன் இயக்கம் காரணமாக மற்ற உறுப்புக்களிலிருந்து மூளையின் தொடர்பு இல்லாமல் போகிறது.
image - sleep care online
அடுத்தது, தூக்கத்தின்போது நமது உணர்ச்சியும் மன ஆற்றலும் தற்காலிகமாக நிலைத்துப் போகின்றன.
உறக்கத்தின்போது நமது உடலானது, பல அசைவுகளுக்கு உள்ளாகின்றது. அதாவது, சராசரியாக 20முதல் 40 தடவைகள் புரண்டு படுக்கிறோம்.
இதயத்துடிப்பு சற்று குறைவடைகிறது, செரிமான உறுப்புக்கள் சரியாக இயங்குகின்றன, ரத்த ஓட்டம் தொடர்ந்து நடைபெறுகின்றது, சிறுநீரகம் மற்றும் ஈரல் தொடர்ந்து செயலாற்றுகின்றது, உடலில் சேர்ந்துள்ள கழிவுகளை வெளியேற்றும் வேலை உறக்கத்தினபோது வேகமாக நடக்கின்றது.
image - health central