தூங்கும் முன் ஆப்பிள் சாப்பிட்டால் ஆபத்தா? ஆப்பிள் சாப்பிட சிறந்த நேரம்
பழங்களை சரியான நேரத்தில் சாப்பிடும்போதுதான் அதன் நன்மைகள் உடலுக்கு கிடைக்கும்.
ஆப்பிளை பொறுத்தவரை, சாப்பிடுவதற்கு சிறந்த நேரம் காலை வேளைதான். ஆப்பிளின் தோலில் பெக்டின் என்னும் சேர்மம் காணப்படுகிறது.
அது தூக்கமின்மை, நேரம் தவறி சாப்பிடுவது காரணமாக ஏற்படும் செரிமான பிரச்சினைகளை சரி செய்ய உதவும். காலையில் ஒரு ஆப்பிளை உட்கொண்டால் அது குடல் இயக்கத்தை தூண்டிவிடும்.
அதில் இருக்கும் பெக்டின் பெருங்குடலில் காணப்படும் கெட்ட பாக்டீரியாக்களை அகற்ற உதவும். மேலும் பெக்டின் உடலில் இருக்கும் நச்சுக்களை நீக்குவதற்கு வழிவகை செய்யக்கூடியது.
காலை வேளையில் ஆப்பிளை சாப்பிடும்போது உடல் முழுவதும் இருக்கும் நச்சுக்களை அப்புறப்படுத்த துணை புரியும். ஆப்பிளின் தோல் பகுதியை நீக்கிவிட்டுத்தான் பலரும் உட்கொள்கிறார்கள்.
ஆப்பிளை தினமும் சாப்பிட்டு வந்தால், வலுவிழந்து மற்றும் பொலிவிழந்து இருக்கும் பற்களை நன்கு பளிச்சென்று மின்ன வைப்பதோடு, ஆரோக்கியத்துடனும் வைத்துக் கொள்ளலாம்.
அது தவறான பழக்கம். ஆப்பிளின் தோல் பகுதியில்தான் பெக்டின் இருக்கிறது. அதனை நீக்கிவிட்டு சாப்பிடுவது முழு பலனை தராது. குடலுக்கு எந்தவித நன்மையும் ஏற்படாது.
அதே வேளையில் ஆப்பிளை அப்படியே சாப்பிடவும் கூடாது. அதன் தோல் பகுதியை நன்றாக கழுவ வேண்டும்.
ஆப்பிள் கெட்டுப்போகாமல் இருப்பதற்காக மெழுகு தேய்க்கப்படுவதாக கூறப்படுவதால் தோல் பகுதியை நன்கு சுத்தம் செய்துவிட்டுத்தான் உட்கொள்ள வேண்டும்.
ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் பெக்டின் அதிகம் உள்ளதால், அவை உடலை கட்டழகுடன் வைத்துக் கொள்ள உதவுகிறது. மேலும் இதில் உள்ள பாலிஃபீனால், உடலில் உள்ள கொழுப்புக்களை கரைத்துவிடும். எனவே எடை குறைய விரும்புவோர், ஆப்பிளை தினமும் சாப்பிடுவது சிறந்தது.
தூங்கும் முன் ஆப்பிள் சாப்பிட்டால் உடல் எடை குறையுமா?
தூங்கும் முன் ஒரு ஆப்பிள் அல்லது ஏதேனும் ஒரு பழத்தை சாப்பிட்டால், உடலின் மெட்டபாலிசம் அதிகரித்து, உடல் எடையைக் குறைக்கலாம் என்ற நம்பிக்கை மக்களிடையே உள்ளது.
இரவில் படுக்கும் முன் ஒரு ஆப்பிளை சாப்பிட்டால், செரிமான பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்கலாம்.
ஏனெனில் ஆப்பிளில் பெக்டின் என்னும் நீரில் கரையக்கூடிய நார்ச்சத்து உள்ளது.
அதோடு ஆப்பிளில் உள்ள இயற்கை சர்க்கரை, இரத்த சர்க்கரை அளவை மெதுவாக அதிகரிக்கும். அதோடு ஆப்பிளில் கலோரிகளும் மிகவும் குறைவு.
அதனால் இரவு வேலையில் ஆப்பிள் சாப்பிடுவது தவறு இல்லை. எனினும் ஆப்பிள் சாப்பிட இரவை விட காலை வேலை தான் மிக சிறந்தது.