மரணத்தின் போது மூளையில் என்ன நடக்கும்?
உயிரிழந்ததன் பின்னர் என்னதான் நடக்கும் என்ற கேள்வி எல்லோர் மனதிலும் இருக்கும். ஆனால், அதற்கான பதில் யாரிடமும் இல்லை என்பதுதான் உண்மை.
ஆனால், உயிரிழந்ததன் பின்னர் இதுதான் நடக்கிறது என்பது பற்றி ஒவ்வொரு மதங்களிலும் ஒவ்வொரு கதைகள் கூறப்படுகின்றன. ஆனால், உண்மையில் இறக்கும்போது மூளையில் என்னதான் நடக்கிறது என்பது குறித்து நரம்பியல் விஞ்ஞானிகள் ஆய்வொன்றை மேற்கொண்டுள்ளனர்.
image - The independant
இதில் நான்கு இறக்கும் நோயாளிகள் உயிரிழக்கும் போது, அவர்களது மூளையில் என்ன நடக்கிறது என்பது குறித்த ஒரு ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.
இது குறித்து ஆய்வாளர்களின் கருத்தானது, மாரடைப்பு ஏற்படும் சந்தர்ப்பத்தில் மூளையின் செயல்பாடு பற்றி இன்னும் தெளிவாகப் புரிந்து கொள்ளவில்லை.
நினைவிழப்பு ஏற்பட்டாலும் இறக்கும் தருவாயில் நோயாளிகள் மறைமுக உணர்வுடன் இருக்க முடியுமா என்பது தெளிவாக இல்லை. இருப்பினும் மாரடைப்பு என்பது இதயத்தை மட்டுமல்லாமல் மூளையிலும் பாதிப்பை ஏற்படுத்துவதாக கூறப்பட்டுள்ளது.
image - staffordshire live