கொரோனாவை துல்லியமாக கணித்த நபர்! 2023ல் நடக்கப்போகும் பாரிய அசம்பாவிதம்
கொரோனா வைரஸ் தொற்று பற்றியும், பாரிஸ் தேவாலய தீ விபத்து தொடர்பிலும் மிகத் துல்லியமாக முன்கூட்டியே ஆரூடங்களை வெளியிட்ட பிரபல மந்திரவாதி எதிர்வரும் 2023 ஆம் ஆண்டு தொடர்பில் சில எதிர்வு கூறல்களை வெளியிட்டுள்ளார்.
எதிர்வரும் 2023 ஆம் ஆண்டு எவ்வாறு அமையும் என்பது பற்றிய எதிர்வுகூறல்களை அவர் வெளியிட்டுள்ளார்.
37 வயதான நிகலோஸ் அவுஜூலா (Nicolas Aujula) என்ற லண்டனைச் சேர்ந்த நபரை இவ்வாறு ஆரூடங்களை வெளியிட்டுள்ளார்.
வேறு எவரும் எதிர் கூறல்களை வெளியிடுவதற்கு முன்னதாகவே இவர் சில ஆருடங்களை வெளியிட்டிருந்தார்.
அந்த வகையில் 2018 ஆம் ஆண்டு வைரஸ் ஒன்றின் மூலம் உலகிற்கு பெரும் தாக்கம் ஏற்படும் என எச்சரிக்கை விடுத்திருந்தார்.
2020 ஆம் ஆண்டு ஒரு வைரசினால் பெரும் தாக்கம் ஏற்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் அமெரிக்க ஜனாதிபதியாக கடமையாற்றிய டொனால்ட் தோல்வி அடைவார் எனவும், கருப்பினவத்தவர்களின் கிளர்ச்சி முன்னெடுக்கப்படும் எனவும் குறிப்பிட்டு இருந்தார்.
பிரபல தேவாலயமான பாரிஸின் நோட்ரே டேம் (Notre Dame ) தேவாலயத்தில் தீ விபத்து ஏற்படும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இதே விதமாக 2023 ஆம் ஆண்டில் ஏற்படக்கூடிய சில நல்ல மற்றும் மிக மிக மோசமான விடயங்கள் தொடர்பில் அஜூலா ஆரூடம் வெளியிட்டுள்ளார்.
பிரித்தானியாவின் மிக முக்கியமான ஒரு கட்டடம் எரிந்து சாம்பலாகும் என ஆரூடம் வெளியிட்டுள்ளார்.
அரசு மாளிகையாகவோ அல்லது ஜனாதிபதி மாளிகையாகவோ இது இருக்கலாம் தெரிவித்துள்ளார்.
பிரித்தானிய அரசு குடும்பத்தினர் செல்வ செழிப்பிலும் மக்கள் ஆதரவிலும் பின்னடைவை எதிர்நோக்குவர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சில நேரங்களில் அவர்கள் தங்களது சொத்துக்களை விற்பனை செய்ய நேரிடும் எனவும், சில சொத்துக்கள் ஹோட்டல்களாக அல்லது வேறு ஏதேனும் தேவைக்கு பயன்படுத்திய நேரிடலாம் என குறிப்பிட்டுள்ளார்.
பிரபல பப் இசை பாடகி மடோனா மிகப்பெரிய ஒரு துயரத்தை எதிர் நோக்குவார் என அவர் மேலும் ஆரூடம் வெளியிட்டுள்ளார்.