இந்த பழங்களை சாப்பிட்ட உடனே தவறியும் தண்ணீர் குடிக்காதீங்க... ஏன்னு தெரியுமா?
பொதுவாக சாப்பிட்ட பின்னர் தண்ணீர் குடிப்பது வழக்கமான விடயம் தான். ஆனால் ஒரு சில உணவுகளை சாப்பிட்ட பிறகு உடனே தண்ணீர் குடிப்பது பக்கவிளைவுகளை ஏற்படுத்தும்.
அப்படி எந்த பழங்களை சாப்பிட்ட பின்னர் உடனடியாக தண்ணீர் குடிக்க கூடாது என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
அன்னாசி
பழம் சாப்பிட்ட பின்பு தண்ணீர் குடித்தால் நாவில் கசப்புத்தன்மை ஏற்படும் அல்லது சுறுசுறு என்ற உணர்வு தோன்றும் அதனால் சிலர் அன்னாசி சாப்பிட்ட உடன் தண்ணீர் குடிக்க விரும்ப மாட்டார்கள்.
தவறி குடித்தால் அதிலுள்ள ப்ரோமெலனின் என்னும் நொதிகள் வயிற்றுப் போக்கு மற்றும் வயிற்று வலியை ஏற்படுத்தும்.
மேலும் கரகரப்பு, தொண்டை வலியை உண்டாக்கும். எனவே உடனே தண்ணீர் குடிக்காமல் அரை மணி நேரம் கழித்து குடிப்பது நல்லது.
பப்பாளி
பப்பாளி பழதட்தில் பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகின்றது. நம் பசிக்கு நிறைவான பழமும் கூட.
பப்பாளியில் பாப்பைன் என்னும் என்சைம் காணப்படுகின்றது. இது செரிமானத்தை தூண்டும் என்சைமாகும்.
அதாவது, இந்த என்சைம் நாம் சாப்பிடும் உணவுகளில் உள்ள புரோட்டீன்களை உடைத்து செரிமான செயல்பாடுகளை துரிதமாக்குகிறது. ஆனால் பாப்பைன் சமிபாடைய சிறிது நேரம் எடுக்கும்
எனவே பப்பாளி சாப்பிட்டு உடனடியாக தண்ணீர் குடிக்கும்போது வயிறு வீக்கம் மற்றும் வயிறு மந்தம் போன்ற அசௌகரியங்களை ஏற்படுத்தும்.
வாழைப்பழம்
அனைவரும் விரும்பி சாப்பிடும் பழம் தான் வாழைப்பழம். வாழைப்பழத்தில் பொட்டாசியம் மற்றும் மாங்கனீசு ஆகிய ஊட்டச்சதத்துக்கள் நிறைந்து காணப்படுகின்றது.
வாழைப்பழம் சாப்பிட்ட உடன் தண்ணீர் குடிக்கும் போது இந்த ஊட்டச்சத்துகளை உடல் முழுமையாக உறிஞ்சிக்கொள்ள முடியாத நிலை ஏற்படும்.
தர்பூசணி
தர்பூசணியில் வைட்டமின் சி அதிக அளவு நிறைந்துள்ளது. தர்பூசணி உட்கொள்வதன் மூலம் நம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்துக் கொள்ள முடியும்.
மேலும் அதில் செறிந்துள்ள வைட்டமின் பி மற்றும் பீட்டா கரோட்டின் ஆகியவையும் இதில் அதிகம் நிறைந்து காணப்படுகின்றது.
ஆனால் இதை ச சாப்பிட்டதும் தண்ணீர் குடித்தால் அது செரிமானப் பிரச்சினைகளை ஏற்படுத்துவதோடு வயறு வீக்கம் மற்றும் உப்பசம் போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |