மூளையின் ஆரோக்கியத்தை பாதுகாக்கணுமா? அப்போ இந்த உணவுகளை சாப்பிடாதீங்க
பொதுவாகவே உடலின் அனைத்து செயல்களும் மூளை வழங்கும் சமிஞ்சைகளுக்கு ஏற்பவே இடம்பெறுகின்றது.
மூளையில் ஏற்படும் மாற்றங்கள் அனைத்தும் உடலிலும் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும். மூளையின் செயற்பாடுகள் சீராக இருக்கும் போது உடலின் இயக்கமும் சீராக இருக்கும்.
நாம் அன்றாடம் அறியாமையால் செய்கின்ற பல செயற்பாடுகள் மூளையின் செயற்பாட்டில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றது.
அவ்வாறு குறிப்பிட்ட சில உணவுகள் மூளையின் ஆரோக்கியத்துக்கு தீங்கு விளைவிப்பதுடன் அறிவாற்றல் குறைபாடு, நினைவாற்றல் இழப்பு மற்றும் நரம்பியல் பிரச்சினைகளையும் ஏற்படுத்தக்கூடியது.
அந்த வகையில் மூளையின் ஆரோக்கியத்தில் பாதக விளைவுகளை ஏற்படுத்தும் உணவுகள் தொடர்பில் இந்த பதிவில் பார்க்கலாம்.
சர்க்கரை சேர்க்கப்பட்ட பானங்கள்
கடைகளில் கிடைக்கூடிய குளிர்பானங்கள் மற்றும் பழச்சாறு போன்றவற்றில் பிரக்டோஸ் எனும் வேதிப்பொருள் அதிமாக இருப்பதால் அவை இன்சுலின் எதிர்ப்பு, வீக்கம் மற்றும் மூளையின் மந்தமான செயற்பாட்டுக்கு வழிவகுக்கும்.
எனவே இவற்றை தவிர்த்துக்கொள்வது, எலுமிச்சை, வெள்ளரிக்காய் அல்லது புதினா போன்ற இயற்கை சுவைகள் கொண்ட தண்ணீரை பருகுவது அல்லது இளநீ்ர் மற்றும் மூலிகை தேனீரை பருகுவது மூளையின் ஆற்றலை அதிகரிக்க உதவும்.
சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்டுகள்
பதப்படுத்தப்பட்ட உணவுகளான வெள்ளை ரொட்டி, பேஸ்ட்ரி போன்றவற்றில் காணப்படும் சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்டுகள் அதிக கிளைசெமிக் குறியீட்டைக் கொண்டிருப்பதன் காரணமாக விரைவாக ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்கும். இவை மூளையின் செயற்பாட்டில் பாதக தாக்கத்தை ஏற்படுத்தும் அபாயம் காணப்படுகின்றது.
அதிக பதப்படுத்தப்பட்ட உணவுகள்
நாம் அன்றாடம் விரும்பி சாப்பிடக்கூடிய சிப்ஸ், இன்ஸ்டன்ட் நூடுல்ஸ் மற்றும் துரித உணவுகள் போன்றவற்றில் அதிக அளவு சர்க்கரை மற்றும் ஆரோக்கியமற்ற கொழுப்பு செறிந்து காணப்படுகின்றது.
இவை மூளையின் செயற்பாட்டை மந்தமாக்குவதுடன் நினைவாற்றலையும் குறைக்கின்றது. மேலும் இவை உள ஆரோக்கியத்திலும் பாதிப்பை ஏற்படுத்தி மன அழுத்தத்துக்கு காரணமாக அமைகின்றது.
அஸ்பார்டேம்
அஸ்பார்டேம் என்பது அமினோ அமிலங்கள் அடங்கிய ஒரு கலவை ஆகும். அது சர்க்கரையை விட 200 மடங்கு இனிப்பானது. டயட் சோடாக்கள் மற்றும் சர்க்கரை இல்லாத பொருட்களில் காணப்படும் செயற்கை இனிப்பான அஸ்பார்டேம் மூளையின் ஆரோக்கியத்தை வலுவாக பாதிக்கக்கூடியது.
ஆல்கஹால்
பொதுவாகவே மது அருந்துதல் உடலில் அனைத்து பாகங்களிலுமே தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியது. குறிப்பாக மூளை சுருங்குவதற்கு வழிவகுக்கும், நரம்பியக்கடத்தி செயல்பாடுகளை சீர்குலைக்கும் மற்றும் அறிவாற்றல் குறைபாடுகளுக்கு மது அருந்துவது பிரதான காரணமாக அமைகின்றது.
அதிக சோடியம்
பதப்படுத்தப்பட்ட மற்றும் டின்னில் அடைக்கப்பட்ட உணவுகளில் சோடியத்தின் செறிவு அதிகமாக இருக்கும். இது ரத்த அழுத்தத்தை அதிகரிப்பதுடன் மூளையின் செயற்பாடுகளை வலுவாக பாதிக்கின்றது. இவ்வாறான உணவுகள் மூளையின் ஆரோக்கியத்தில் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்துகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |