Situationship - அப்படினா என்ன? எப்படி அறிந்துக்கொள்வது?
பொதுவாகவே மனிதர்களாக பிறந்த அனைவருக்கும் தனது சுக துக்கங்களை பகிர்ந்துக்கொள்ள ஒரு உண்மையான உறவு நிச்சயம் தேவை. இதன் விளைவாக தோன்றுவதே காதல் உறவு.
முன்னைய காலங்களில் காதல் என்றால் காதல் என்று மட்டும் தான் அர்த்தப்படும். ஆனால் தற்கால இளைஞர்களுக்கு பொறுப்புகளை ஏற்கும் பக்கும் மிகவும் குறைந்துவிட்டது அதன் விளைவாக காதல் உறவுக்கு பல பெயர்கள் கொடுக்கப்பட்டுவிட்டது.
ஒருவரை பிடித்திருக்கிறது என்றால், அவருடன் சில நாட்கள் அல்லது மாதங்கள் கேஷுவல் டேட்டிங் செய்கின்றனர். ஒரு சிலர் டேட்டிங் செய்யாமலேயே காதலிப்பது போன்று எதிரில் இருக்கும் நபருக்கு நம்பிக்கை கொடுக்கின்றனர்.
இப்படி, நாம் இருக்கும் உறவு காதலா? நட்பா? எனும் குழப்பத்தில் தற்கால இளைஞர்கள் சிக்கி தவிக்கின்றனர். அதற்கு பெயர்தான் Situationship. அந்த குழப்பம் நிறைந்த பொறுப்பற்ற உறவை எவ்வாறு கண்டறிவது என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
Situationship எது?
உங்களுக்கு ஒருவர் மீது இயற்கையாகவே ஈர்ப்பு ஏற்படும் போது இதற்கு காதல் என்று பெயர் கொடுக்காமல் நெருக்கமாக பழகிக்கொண்டிருக்கின்றீர்கள் என்றால் அது தான் Situationship.இந்த உறவுக்கு ஒரு குறிப்பிட்ட பெயரே இருக்காது.
காதலன்/காதலியாக அவருக்கு நீங்கள் இருக்க மாட்டீர்கள். ஆனால் அது நட்பாக மட்டும் இருக்கின்றதா என்றால், அதுவும் கிடையாது.
அதே சமயம் அதை காதல் என்று சொன்னால் திருமணம் என்ற பொறுப்பை சந்திக்க நேரிடும் என்ற பயத்திற்கு நீங்கள் கொடுத்துள்ள பெயர் தான் இந்த Situation ship காதல் உறவில் இருவர் பக்கம் இருந்தும் சில அர்பணிப்புகள் (Efforts) இருக்கும்.
ஆனால் Situationship இல் இவ்வாறான தியாகங்கள் இருக்காது. , இதனை தக்கவைத்துக்கொள்ள ஒருவர் மட்டும் முயற்சியெடுத்தால் அவர் மட்டும் வலிகளை சுமக்க வேண்டியிருக்கும்.
அல்லது இருவரும் பொறுப்பற்ற நிலையில் இருக்கும் போது எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும். நீங்கள் இருக்கும் உறவு Situationship என்பதை உணர்ந்த பின்னரும் அந்த உறவுக்கு முக்கியத்துவம் கொடுப்பதால் வாழ்க்கையே பாழாகிவிடும்.
Situationship இல் இருக்கும் இருவர் அடிக்கடி பேசிக்கொண்டாலும், எதையும் தெளிவாக பேசாதது போன்ற உணர்வு ஏற்படும். இதில் உண்மைத்தன்மை மற்றும் நம்பகத்தன்மை சுத்தமாக இருக்காது. இப்படி நீங்கள் இருப்பது ஒரு தெளிவற்ற உறவு என்பதை உணர்ந்தால் அதிலிருந்து உடனடியாக வெளியேறிவிடுங்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
