மகுடி இசைக்கு பாம்பு நடனமாடுமா? உண்மை என்ன?
பொதுவாகவே பாம்புகளை மையப்படுத்தி எடுக்கப்பட்ட பல்வேறு திரைப்படங்களிலும் சரி, சீரியல்களிலும் சரி ஏன் நிஜத்திலும் சரி பாம்புகள் மகுடிக்கு சத்தத்துக்கு மயங்கி படமெடுத்து ஆடும் என்று தான் காண்பிக்கப்படுகின்றது.
கண்களால் காண்பதும் பொய், காதுகளால் கேட்பதும் பொய் தீர விசாரித்து அறிவதே மெய் என்று ஒரு பழமொழி காணப்படுகின்றது. அதனை பறைசாற்றும் வகையில், பாம்புகளால் மகுடி சத்தத்தை கேட்கவே முடியாது என்றால் உங்களால் நம்ப முடிகின்றதா?

பின்னர் எப்படி பாம்பு மகுடி ஊதும் போது படமெடுத்து நிற்கின்றது என்று தானே தோன்றுகின்றது? அதற்கு பின்னால் இருக்கும் அறிவியல் என்ன என்பது குறித்து விரிவான மற்றும் தெளிவான விளக்கத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.
மகுடி இசைக்கு பாம்பு நடனமாடுமா?
அனைவருமே வாழ்வில் ஒரு முறையாவது மகுடி இசைக்கு பாம்பு நடனமாடுவதைப் பார்த்திருப்போம். ஆனால் அது உண்மையில் அந்த சத்தத்துக்கு தான் எதிர்வினை புரிகிகன்றதா என்பது குறித்து பெரும்பாலானவர்கள் சிந்திப்பது கிடையாது.

காரணம் தொன்று தொட்டு பாம்பு மகுடி சத்ததை கேட்டால் அதை பின்தொடர்ந்து வரும் என்றும் மகுடி இசையில் மயங்கி தான் நடனமாடுகின்றது என்றும் தானே நம்மை பயமுறுத்தி வைத்திருகின்றார்கள்.
ஆனால் பாம்புகள் எப்போதும் தன்னைத் தாக்க எதிரி விலங்கு முன்னே வரும்போது தற்காத்துக்கொள்ள இயல்பாக தலையை உயர்த்திப் படமெடுத்து சீறும். எதிரி அசையும் திசையை பார்த்து தாக்குவதற்காக அசையும்.

அதேபோல தான் மகுடி கலைஞர் மகுடி வாசிப்பின்போது அசைந்தாடுவதைக் காணும் பாம்பு, அவரது உடல் அசைவுக்கு ஏற்ப படமெடுது இட வலமாகவோ, முன் பின்னாகவோ நகரும். இதனைக் காண்போர் பாம்பு இசையில் மயங்கி நடனமாடுவதாக நினைப்பார்கள் உண்மையில் பாம்புகளால் மகுடி சத்தத்தை மட்டுமல்ல எந்த சத்தத்தையுமே கேட்க முடியாது. அதை அதிர்வுகளை உணர்ந்தே எதிர்வினை புரிகின்றது.

பாம்புகள் காது கேட்காது ஆனால் பார்வையில்லாதது அல்ல பாம்பு மகுடி இசைக்கு விளையாடும் போது, இந்த பாம்புகள் அதன் இயக்கத்தின் அடிப்படையில் தங்கள் உடலை நகர்த்துகின்றன. இதைப் பார்க்கும்போது பாம்புகள் நடனமாடுவது போன்ற உணர்வு நமக்கு தோன்றுகின்றது.
பாம்புகளுக்கு கேட்கும் திறன் தான் இல்லையே தவிர, அதனால் வாசனை மனிதர்களை விட பலமடங்கு சிறப்பாக நுகரமுடியும். பாம்புகள் எதிரியின் வாசத்தை உணர்ந்துகொள்ள அடிக்கடி நாக்கை வெளியே நீட்டும்.

காற்றின் நுண்துகள் மூலம் எதிரி அல்லது இரை விலங்கின் வாசத்தை மூளையில் உணரும். நாக்கை வெளியே நீட்டுவதன் மூலம் பாம்புகள் பருவகாலத்தில் துணையை ஈர்க்கவும் செய்யும். எனவே பாம்பு தனது செவித்திறன், கண் பார்வையைவிட அதிகம் நம்புவது நாக்கைத்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |