வீட்டின் அக்னி மூலையிலிருந்து பல்லி சத்தம் கேட்டால் ஆபத்தா? அவசியம் தெரிஞ்சிக்கோங்க
பொதுவாக தமிழர்களின் கலாச்சாரப்படி பல்லியைப் பார்ப்பது நல்ல சகுனமாக பார்க்கப்படுகின்றது.
இந்து புராணங்களில், பல்லிகள் தெய்வங்களுடன் தொடர்புடையவையாகவும் வீட்டிற்கு தேவையான ஆசீர்வாதங்களை கொண்டு வருபவையாக பார்க்கப்படுகின்றது.
எவ்வளவு சிறப்புக்கள் இருந்தாலும் வீடுகளில் கதவு திறக்கும் இடங்களில் அல்லது ஜன்னல் ஓரங்களில் பார்த்தால் நம்மை அறியாமல் பயம் வரும். இன்னும் சில நேரங்களில் ஒரு வகையான சத்தத்தை ஏற்படுத்தும். இதனை “கவுலி சத்தம்” என்பார்கள்.
இவ்வாறு பல்லி சத்தம் போடும் அது நல்ல சகுனமாக பார்க்கிறார்கள். மகாலட்சுமியின் முக்கிய அம்சமாக பல்லி பார்க்கப்படுகின்றது. இதன் அடையாளமாக காஞ்சிபுர பெருமாள் கோயில், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயம் ஆகிய இடங்களில் பார்க்கலாம்.
அந்த வகையில் பல்லி சத்தம் போட்டால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
பல்லி சத்தம் கேட்டால்..,
1. வாஸ்துப்படி குபேர மூலையில் தென்மேற்கு திசையிலிருந்து பல்லி சத்தம் போட்டால் வீட்டிற்கு விருந்தினர்கள் வருவார்கள். அதாவது நெருங்கிய உறவுகள் வருவார்கள். இதனால் நன்மை உண்டாக வாய்ப்பு இருக்கிறது.
2. அக்னி மூலையில் அதாவது வீட்டின் தென்கிழக்கு திசையிலிருந்து பல்லி சத்தம் கேட்டால் வீட்டில் ஏதாவது கலவரம் ஏற்படும். அல்லது பல்லி சத்தம் போட்டு சில காலங்களில் கெட்ட செய்தி வீடு தேடி வரும்.
3. ராகு கிரக ஆதிக்கம் கொண்ட கிழக்கு திசையிலிருந்து பல்லி சத்தமிடுவது வீட்டிற்கு நல்லதல்ல. இது ஏதாவது கெட்ட செய்திக்கான அறிகுறியாக இருக்கலாம்.
4. வாயு மூலையான வடக்கு திசையிலிருந்து பல்லி சத்தம் கேட்டால் சுப செய்திகள் நடக்கும்.
5. இரண்டு பல்லிகளின் சந்திப்பு மாற்றம், தகவமைப்பு, மீளுருவாக்கம் அல்லது உள்ளுணர்வைக் குறிக்கலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |