வீட்டில் மண் பானைகளில் தண்ணீர் வைக்க என்ன காரணம்? மருத்துவத்துடன் கூடிய விளக்கம்
பொதுவாக கோடைக்காலம் ஆரம்பித்து விட்டால் வீடுகளில் மண் பானைகளில் தண்ணீர் வைக்க ஆரம்பி விடுகிறார்கள்.
வெயிலில் நடந்து களைத்து போய் வீட்டிற்குள் வருபவர்கள் அதில் தான் முதலில் தண்ணீர் குடிப்பார்கள்.
இப்படி வைக்கப்படும் தண்ணீரை குடிப்பதால் சளி, இருமல் பேச்சிற்கே இடம் இருக்காது. மாறாக குளிரூட்டிகளில் வைக்கப்படும் தண்ணீர் போத்தல்களால் இந்த நிலை ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.
அந்த வகையில் மண் பானைகளில் தண்ணீர் வைப்பதை பாரம்பரியமாக செய்து வர என்ன காரணம்? இதனால் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகள் என்ன? என்பது பற்றி தொடர்ந்து பதிவில் காணலாம்.
மண்பானையில் உள்ள தண்ணீரை பருகுவது தமிழர்களின் பழங்கால பழக்கங்களில் ஒன்று. நவீன வாழ்க்கை மாறினாலும் இந்த பழக்கம் சில வீடுகளில் மாறாமல் இருக்கிறது.
அதே வேளை, கிராமங்களில் இன்றும் மண்பானையில் தண்ணீர் குடிக்கும் பழக்கம் இருந்து வருகிறது.
மண் பானையில் நீர் வைத்து பருக என்ன காரணம்?
1. களிமண் பானையில் தண்ணீர் வைப்பதால் மெடபாலிஸம் அதிகமாகிறது. மேலும் இந்த தண்ணீரில் முக்கியமான தாதுக்கள் இருப்பதால் செரிமானம் இலகுவாக நடக்கும்.
2. கோடை காலங்களில் எழும் வெப்பத்தை தணிக்கும் ஆற்றல் இந்த மண்பானைக்கு இருக்கிறது. உடல் குளிர்ச்சியாக இருக்கும்.
3. பொதுவாக பானைகள் செய்யும் களிமண்ணில் பலவித தாதுக்கள் இருக்கின்றன. இது உடலுக்கு தேவையான சமயங்களில் உதவியாக இருக்கிறது.
4. குளிரூட்டில் இருக்கும் தண்ணீர் குடித்து வந்தால் தொண்டையில் அரிப்பு, புண்கள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. குளிர்ந்த தண்ணீர் வேண்டுமென்றால் இவ்வாறு பானைகளில் வைக்கும் நீரை குடிக்கலாம்.
5. இயற்கையாக தண்ணீரில் அழுக்குகள் மற்றும் தீங்கு நிறைந்த நச்சுகள் இருக்கும் இதனை இல்லாமாக்கி சுத்தமான தண்ணீரை தரும் வேலையை மண் பானை செய்கிறது. அதாவது இயற்கையான முறையில் தண்ணீரை சுத்திகரிப்பு செய்கிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |